சுண்டிக்குளம் தேசிய வனம்
சுண்டிக்குளம் தேசிய வனம் (Chundikkulam National Park) வட இலங்கையில் அமைந்துள்ள ஒரு தேசிய பூங்கா ஆகும். இது கிளிநொச்சியின் வடகிழக்கில் ஏறக்குறைய 12 km (7 mi) தூரத்தில் அமைந்துள்ளது.
சுண்டிக்குளம் தேசிய வனம் | |
---|---|
சுண்டிக்குளம் தேசிய பூங்கா | |
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
வட மாகாணத்திலி அமைவு | |
அமைவிடம் | வட மாகாணம் |
அருகாமை நகரம் | கிளிநொச்சி |
ஆள்கூறுகள் | 09°29′55″N 80°30′25″E / 9.49861°N 80.50694°E |
பரப்பளவு | 196 km2 (76 sq mi) |
நிறுவப்பட்டது | 25 பெப்ரவரி 1938 22 சூன் 2015 (தேசிய வனம்) | (சரணாலயம்)
நிருவாகி | வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் |
சுண்டிக்குளம் கடல் நீரேரியும் அதனைச் சுற்றிலும் காணப்ட்ட இடங்களும் பறவை வனவிலங்குகள் காப்பகம் என 25 பெப்ருவரி 1938 அன்று Fauna and Flora Protection Ordinance (No. 2) of 1937 சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டது.[1]
மே 2015 இல் அரசாங்கம் சுண்டிக்குளத்துடன், ஆதாம் பாலம், நெடுந்தீவு, மடு வீதி ஆகியவற்றை தேசிய வனங்களாக்கவிருப்பதாக அறிவித்தது.[2] சுண்டிக்குளம் வனவிலங்குகள் காப்பகம் தேசிய வனமாக 22 சூன் 2015 அன்று அதன் 19,565 ha (48,347 ஏக்கர்கள்) பரப்புடன் அறிவிக்கப்பட்டது.[3][4]
உசாத்துணை
தொகு- ↑ Green, Michael J. B. (1990). IUCN Directory of South Asian Protected Areas (PDF). பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். pp. 201–202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-8317-0030-2.
- ↑ Rodrigo, Malaka (10 May 2015). "Wild north gets Govt’s helping hand at last". The Sunday Times (Sri Lanka). http://www.sundaytimes.lk/150510/news/wild-north-gets-govts-helping-hand-at-last-148433.html.
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Government Notifications THE FAUNA AND FLORA PROTECTION ORDINANCE (CHAPTER 469) Order under Subsection (4) of Section 2". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1920/03. 22 June 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Jun/1920_03/1920_03%20E.pdf.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "National Parks". Department of Wildlife Conservation. Archived from the original on 2016-01-20. பார்க்கப்பட்ட நாள் 2017-03-06.