இசுக்கொட்லாந்து

வட ஐரோப்பிய நாடு, ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதி
(சுகொட்லாந்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுகாட்லாந்து (ஆங்கிலம்: Scotland) வடமேற்கு ஐரோப்பாவில் பெரிய பிரித்தானியத் தீவில் உள்ள நாடு. இது ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பாகமாகும்.[1][2][3] இதன் கிழக்கில் வட கடலும், வடமேற்கிலும் மேற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும், தென்மேற்கில் வடக்குக் கால்வாயும் ஐரியக் கடலும் சூழ்ந்துள்ளது. இதன் தெற்கில் இங்கிலாந்துடன் தனது எல்லையைக் கொண்டிருக்கிறது. முதன்மையான பெரும் தீவு மட்டுமின்றி 790க்கும் மேற்பட்ட சிறு தீவுகளும் சுகாட்லாந்தில் அடங்கும்.[4]

சுகாட்லாந்து
அல்பா (சுகாட்டிய கேலிக் மொழி)
கொடி of சுகாட்லாந்து
கொடி
படைக்கலச் சின்னம் of சுகாட்லாந்து
படைக்கலச் சின்னம்
குறிக்கோள்: Nemo me impune lacessit (Latin for "No one provokes me with impunity")1
சுகாட்லாந்துஅமைவிடம்
தலைநகரம்எடின்பரோ
பெரிய நகர்கிளாசுக்கோ
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம், சுகாட்டிய கேலிக் மொழி, சுகாட்டு மொழி
அரசாங்கம்அரசியல்சட்ட முடியாட்சி
அரசி எலிசபெத் II
டேவிட் கேமரன்
ஐக்கியப்படுத்துதல்
பரப்பு
• மொத்தம்
78,771 km2 (30,414 sq mi)
• நீர் (%)
1.9
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
5,094,800 (2ஆவது)
• 2001 கணக்கெடுப்பு
5,062,011
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2002 மதிப்பீடு
• மொத்தம்
$130 பில்லியன்
• தலைவிகிதம்
$25,546
மமேசு (2003)0.939
அதியுயர் · 15ஆவது
நாணயம்பிரித்தானிய பவுண்டு (GBP)
நேர வலயம்ஒ.அ.நே0 (கிரீன்விச் இடைநிலை நேரம்)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+1 (BST)
அழைப்புக்குறி44
இணையக் குறி.uk
1ஐக்கிய இராச்சியத்தின் மற்றப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் குறிக்கோளுரை: தியு யெ மொன் துவா (பிரெஞ்சு மொழியில் "கடவுளும் எனது உரிமையும்")

நாட்டின் இரண்டாம் பெரிய நகரும், ஐரோப்பாவின் மிகப்பெரிய வணிக மையங்களுள் ஒன்றான எடின்பரோ நகரம் இதன் தலைநகரமாகும். இந்நகரில்தான் 18ஆவது நூற்றாண்டில் சுகாட்லாந்திய அறிவொளி நிகழ்ந்தது. சுகாட்லாந்தின் பெரிய நகரமான கிளாசுக்கோ[5] முன்னொரு காலத்தில் உலகின் முன்னணி தொழில்நகரங்களில் ஒன்றாக விளங்கியது. சுகாட்லாந்தின் வட அத்திலாந்திக்குப் பெருங்கடல் மற்றும் வட கடல் கடற்பரப்புகளில்[6] ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரும் எண்ணெய் இருப்பு உள்ளது. இதனால் சுகாட்லாந்தின் மூன்றாவது பெரிய நகரமான அபர்தீனுக்கு ஐரோப்பாவின் எண்ணெய்த் தலைநகர் என்ற பட்டம் கிடைத்துள்ளது.[7]

துவக்க நடுக் காலத்தில் தனியான இறையாண்மையுள்ள சுகாட்லாந்து இராச்சியம் உருவானது. இந்நிலை 1707 வரை தொடர்ந்தது. 1603இல் இங்கிலாந்தின் ஆறாம் சேமுசின் முடிசூடலை அடுத்து இங்கிலாந்துடனும் அயர்லாந்துடனும் விரும்பிய ஒன்றிணைப்பு செய்துகொண்ட சுகாட்லாந்து மே 1,1707இல் பெரிய பிரித்தானிய இராச்சியம் உருவாக்க அரசியல் ஒன்றிணைப்பை ஏற்றது. இதனையடுத்து இரு நாட்டு நாடாளுமன்றங்களும் ஒன்றிணைப்புச் சட்டங்களை நிறைவேற்றின. இந்த ஒன்றிணைப்பிற்கு எதிராக பரவலாக எடின்பர்கு, கிளாசுக்கோ, மற்றும் பிற இடங்களில் கிளர்ச்சி எழுந்தது.[8][9] பெரிய பிரித்தானியா பின்னர் சனவரி 1, 1801இல் அயர்லாந்துடன் அரசியல் ஒன்றிணைப்பை மேற்கொண்டு பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியத்தை உருவாக்கியது.

சுகாட்லாந்தின் சட்ட முறைமை இங்கிலாந்து, வேல்சு மற்றும் வட அயர்லாந்து சட்ட முறைமைகளிலிருந்து வேறுபட்டே இருந்து வந்துள்ளது. சுகாட்லாந்தில் பொதுச் சட்டத்திற்கும் தனிச் சட்டத்திற்கும் தனித்தனி நீதிபராமரிப்பு இருந்தது.[10] ஐக்கிய இராச்சியத்தின் பிற பகுதிகளிலிருந்து வேறுபட்ட சட்ட, கல்வி, சமய நிறுவனங்களை தொடர்ந்து வருவதால் சுகாட்டிய பண்பாடும் தேசிய அடையாளமும் 1707 ஒன்றிணைப்பிற்குப் பிறகும் காக்கப்பட்டுள்ளது.[11] 1999இல், ஒப்படைப்பு சட்டமன்றமான சுகாட்டிய நாடாளுமன்றம் உருவான பிறகு உள்துறை விவகாரங்களில் பலவற்றில் அதிகாரம் பகிரப்பட்டுள்ளது. மே 2011இல் சுகாட்டிய தேசியக் கட்சி சுகாட்டிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை வென்றது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 18, 2014இல் விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.[12][13]

மேற்சான்றுகள்

தொகு
  1. "The Countries of the UK". Office for National Statistics. பார்க்கப்பட்ட நாள் 24 June 2012.
  2. "Countries within a country". 10 Downing Street. Archived from the original on 16 April 2010. பார்க்கப்பட்ட நாள் 24 August 2008. The United Kingdom is made up of four countries: England, Scotland, Wales and Northern Ireland
  3. "ISO 3166-2 Newsletter Date: 28 November 2007 No I-9. "Changes in the list of subdivision names and code elements" (Page 11)" (PDF). International Organization for Standardization codes for the representation of names of countries and their subdivisions – Part 2: Country subdivision codes. பார்க்கப்பட்ட நாள் 31 May 2008. SCT Scotland country
  4. "Scottish Executive Resources" (PDF). Scotland in Short. Scottish Executive. 17 February 2007. Archived from the original (PDF) on 4 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 14 September 2006. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "A quick guide to glasgow". Glasgow City Centre. Archived from the original on 23 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 20 June 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. The Scottish Adjacent Waters Boundaries Order. London: The Stationery Office Limited. 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-11-059052-X. பார்க்கப்பட்ட நாள் 20 September 2007.
  7. "Our City". Aberdeen City Council. Archived from the original on 22 September 2010. பார்க்கப்பட்ட நாள் 1 December 2009. Aberdeen's buoyant modern economy – is fuelled by the oil industry, earning the city its epithet as 'Oil Capital of Europe'
  8. Devine, T. M. (1999). The Scottish Nation 1700–2000. Penguin Books. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-023004-1. From that point on anti-union demonstrations were common in the capital. In November rioting spread to the south west, that stronghold of strict Calvinism and covenanting tradition. The Glasgow mob rose against union sympathisers in disturbances that lasted intermittently for over a month
  9. "Act of Union 1707 Mob unrest and disorder". London: The House of Lords. 2007. Archived from the original on 1 January 2008. பார்க்கப்பட்ட நாள் 23 December 2007.
  10. Collier, J. G. (2001) சட்ட முரண்பாடுகள் (மூன்றாம் பதிப்பு)(pdf) கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். "ஆங்கில பிணக்குச் சட்டங்களின்படி, இங்கிலாந்து மற்றும் வேல்சின் அங்கமல்லாத உலகின் ஒவ்வொரு நாடும் வெளிநாடு ஆகும்;இந்நாட்டுச் சட்டங்கள் வெளிநாட்டுச் சட்டங்களாகும். இதன்படி முழுமையும் வெளிநாடுகளான பிரான்சு, உருசியா போன்றவற்றைத் தவிர போக்லாந்து தீவுகள் போன்ற பிரித்தானியக் குடியேற்றங்களும் வெளிநாடுகளே. தவிரவும், ஐக்கிய இராச்சியத்தின் அங்கங்களும் – ஸ்காட்லாந்தும் வட அயர்லாந்தும் – வெளிநாடுகளே. இவ்வாறே மாண் தீவு, யேர்சி மற்றும் குயெர்ன்சி போன்ற மற்ற பிரித்தானியத் தீவுகளும் வெளிநாடுகளே."
  11. Devine, T. M. (1999), The Scottish Nation 1700–2000, P.288–289, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-023004-1 "created a new and powerful local state run by the Scottish bourgeoisie and reflecting their political and religious values. It was this local state, rather than a distant and usually indifferent Westminster authority, that in effect routinely governed Scotland"
  12. "Scotland: Independence Referendum Date Set". BSkyB. 21 March 2013. பார்க்கப்பட்ட நாள் 4 May 2013.
  13. Gardham, Magnus (2 May 2011). "Holyrood election 2011: Alex Salmond: Referendum on Scottish independence by 2015". Daily Record (Scotland). http://www.dailyrecord.co.uk/news/politics-news/2011/05/02/alex-salmond-referendum-on-scottish-independence-by-2015-86908-23102061/. பார்த்த நாள்: 14 October 2011.