சிறுத்தை

ஆசியா மற்றும் ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட பெரும்பூனை இனம்
(சிறுத்தைப்புலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிறுத்தை
குரூகர் தேசியப் பூங்காவில் உள்ள ஓர் ஆப்பிரிக்க சிறுத்தை (P. p. pardus)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. pardus
இருசொற் பெயரீடு
Panthera pardus
(லின்னேயசு, 1758)
சிறுத்தைகளின் பரம்பல், முன்பு (பச்சை), தற்போது (சிவப்பு), மற்றும் நிலையற்றது (மஞ்சள்)

சிறுத்தை (Leopard) பூனைப் பேரினத்தின் உறுப்பினரும் பெரிய பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இனங்களில் மிகவும் சிறிய இனமும் ஆகும். ஏனையவை சிங்கம், புலி, ஜாகுவார் என்பனவாகும். சிறுத்தைகள் ஒரு காலத்தில் சைபீரியா முதல் தென்னாபிரிக்கா வரையுள்ள கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளில் பரந்திருந்தன. ஆனால் வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு போன்ற காரணங்களால் அவற்றின் பரம்பல் விரைவாகக் குறைவடைந்துள்ளது. இவை தற்போது உப சகார ஆப்பிரிக்கப் பகுதிகளிலேயே பிரதானமாகக் காணப்படுகின்றன. மேலும் இந்தோனேசியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இந்தோசீனா, மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் சிறியளவில் காணப்படுகின்றன. இவற்றின் பரம்பல் மற்றும் தொகை வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் அச்சுறு நிலையை அண்மித்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[2]

பெரிய பூனைக் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுடன் ஒப்பிடுகையில் சிறுத்தை ஒப்பீட்டளவில் சிறிய கால்களையும், பெரிய மண்டையோட்டுடன் கூடிய நீண்ட உடலையும் கொண்டிருக்கும். தோற்ற அமைப்பில் ஜாகுவாரைப் போன்று காணப்பட்டாலும், இது ஓரளவு சிறிய உடலைக் கொண்டிருக்கும். ஜகுவாரின் உடலில் காணப்படுவதைப் போன்றே சிறுத்தையின் தோலிலும் அடையாளங்கள் காணப்படும். எனினும், சிறுத்தையின் தோலிலுள்ள அடையாளங்கள் மிகவும் சிறியனவாயும் மிகவும் நெருக்கமாகவும் இருக்கும். மேலும் ஜாகுவார்களுக்கு உள்ளதைப் போன்று மையத்தில் புள்ளிகளும் காணப்படாது. கருமை நிறமான சிறுத்தைகளும் ஜாகுவார்களும் கருஞ்சிறுத்தைகள் (black panthers) என அழைக்கப்படுகின்றன.

சூழலுக்குத் தக்கதான வேட்டையாடும் தன்மை, வாழ்விடத்துக்குத் தக்கபடி இசைவாகும் தன்மை, 58 kilometres per hour (36 mph)ஐ நெருங்கும் வேகத்தில் ஓடக்கூடிய தன்மை, பாரமான இரையையும் தூக்கிக் கொண்டு மரங்களில் ஏறும் ஆற்றல்,[3] மற்றும் மறைந்து வாழும் தன்மை போன்ற பல்வேறு காரணிகள் மூலம் காடுகளில் தப்பி வாழக்கூடியதாக உள்ளது. சிறுத்தை தான் வேட்டையாடும் எந்தவொரு மிருகத்தையும் உணவாகக் கொள்ளும். இதன் வாழ்விடங்கள் மழைக்காடுகளில் இருந்து பாலைவனப் பகுதிகள் வரை வேறுபடுகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. Stein, A.B.; Athreya, V.; Gerngross, P.; Balme, G.; Henschel, P.; Karanth, U.; Miquelle, D.; Rostro, S. et al. (2016). "Panthera pardus". The IUCN Red List of Threatened Species (IUCN) 2016: 15954/102421779. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T15954A50659089.en. https://www.iucnredlist.org/species/15954/102421779. {{cite iucn}}: error: malformed |page= identifier (help)
  2. Henschel, P., Hunter, L., Breitenmoser, U., Purchase, N., Packer, C., Khorozyan, I., Bauer, H., Marker, L., Sogbohossou, E., Breitenmoser-Würsten, C. (2008). "Panthera pardus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். {{cite web}}: Invalid |ref=harv (help)CS1 maint: multiple names: authors list (link)
  3. "Animal bytes: Leopard". Zoological Society of San Diego. பார்க்கப்பட்ட நாள் 13 February 2010.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுத்தை&oldid=3420725" இலிருந்து மீள்விக்கப்பட்டது