சம்ஷேர் பகதூர் (கிருஷ்ணா ராவ்)
கிருஷ்ணா ராவ் (Krishna Rao) என்றும் அழைக்கப்படும் முதலாம் சம்ஷேர் பகதூர் (Shamsher Bahadur I ) (28 சனவரி 1734 - 14 சனவரி 1761), வட இந்தியாவில் பண்டா மாநிலத்தின் மராட்டிய ஆட்சியாளராக இருந்தார். இவர் முதலாம் பாஜிராவ் மற்றும் மஸ்தானியின் மகனாவார். [1] [2]
சம்ஷேர் பகதூர் | |
---|---|
பாஜிராவின் மகன், பண்டாவின் ஜாகிர்தார் மற்றும் கல்பி <ஜான்சியின் சுபேதார் | |
பண்டாவின் மராட்டிய ஆட்சியாளர் | |
பிறப்பு | 1734 மஸ்தானி அரண்மனை, சனிவார்வாடா, புனே, மராட்டியப் பேரரசு. |
இறப்பு | 1734 சனவரி 18, பரத்பூர் |
துணைவர் | மெக்ரம்பாய் |
மரபு | பண்டா மாநிலம் (மராட்டியப் பேரரசு) |
தந்தை | பாஜிராவ் |
தாய் | மஸ்தானி |
மதம் | சுன்னி இசுலாம் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுபகதூர் மராட்டிய பேஷ்வா முதலாம் பாஜிராவுக்கும் அவரது இரண்டாவது மனைவி மஸ்தானிக்கும் மகனாகப் பிறந்தார். இவரின் தாய் பாரசீக முஸ்லிமாவார். இவர் பிறந்ததும் இவருக்கு கிருஷ்ண ராவ் என பெயரிட்டனர். பாஜிராவ், தனது மகனை ஒரு இந்து பிராமணராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார். ஆனால் இவரது தாயின் முஸ்லிம் பாரம்பரியம் காரணமாக, இவரது அந்தணர்கள் உபநயன விழாவை நடத்த மறுத்துவிட்டனர். இறுதியில் கிருஷ்ணா ராவிற்கு 'சம்ஷேர் பகதூர்' என பெயரிடப்பட்டதுடன் முஸ்லீம் இனத்தவனாக வளர்க்கப்பட்டான். [3] மராட்டிய பிரபுக்களும் தலைவர்களும் மஸ்தானியை பேஷ்வாவின் முறையான மனைவியாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், இவரது கல்வி மற்றும் இராணுவப் பயிற்சி பேஷ்வா குடும்பத்தின் மற்ற மகன்களுக்கு ஏற்ப இருந்தது. [1] 1740 இல் பாஜிராவ் மற்றும் மஸ்தானி இருவரும் இறந்த பிறகு, பாஜிராவின் முதல் மனைவியான காஷிபாய் இவரை 6 வயது முதல் தனது மகனில் ஒருவனாகவே வளர்த்து வந்தார். இவர் 1749 ஆம் ஆண்டு சனவரி 14 ஆம் தேதி லால் குன்வர் என்பவரை மணந்தார். 1753 இல் தனது மனைவி இறந்த உடனேயே, 1753 அக்டோபர் 18 அன்று மெக்ரன்பாய் என்பவரை மணந்தார்.
இராணுவ வாழ்க்கையும் ஆட்சியும்
தொகுஇன்றைய வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பாஜிராவின் ஆட்சிக்கு உட்பட்ட பண்டா மற்றும் கல்பியின் ஒருபகுதி சம்ஷேர் பகதூருக்கு வழங்கப்பட்டது. இவர் இரகுநாதராவ், மல்கர் ராவ் ஓல்கர், தத்தாஜி ஷிண்டே, ஜான்கோஜி ஷிண்டே மற்றும் பிற சர்தார்களுடன் துராணிப் பேரரசிற்கு எதிராக 1757-1758 இல் பஞ்சாபிற்குச் சென்று 1758 இல் அட்டோக், பெசாவர், முல்தான் ஆகிய பகுதிகளை வென்றார். இவர் வட இந்தியாவின் மராட்டிய வெற்றியின் ஒரு பகுதியாக இருந்தார். 1761 ஆம் ஆண்டில், அகமத் ஷா அப்தாலியின் ஆப்கானிய படைகளுக்கும் ,மராட்டியர்களுக்கும் இடையிலான மூன்றாம் பானிபட் போரில் பேஷ்வா குடும்பத்தைச் சேர்ந்த இவரது உறவினர்களுடன் இவரும் இவரது இராணுவத்தினரும் சண்டையிட்டனர். அந்த போரில் இவர் காயமடைந்து சில நாட்களுக்குப் பிறகு தீக்கில் இறந்தார். [4]
சந்ததியினர்
தொகுஇவரது மரணத்திற்குப் பின்னர், இவரது மகன் அலி பகதூர் (கிருஷ்ணா சின்கா) (1758-1802), வட இந்தியாவில் பண்டா (இன்றைய உத்தரப்பிரதேசம் ) பகுதியின்ன் நவாப் ஆனார். இது மராட்டியப் பேரரசின் கீழ் அடிணிந்த ஒரு பகுதியாகவே இருந்தது. [5] சக்திவாய்ந்த மராத்தா பிரபுக்களின் அனுசரணையில், அலி பகதூர் புண்தேல்கண்டின் பெரும்பகுதிகளில் தனது அதிகாரத்தை நிலைநாட்டி பண்டாவின் நவாப் ஆனார். மேலும் தனது நம்பகமான உதவியாளர் இராம்சிங் பட்டை கலிஞ்சரின் காவல்துறை தலைவராக நியமித்தார். இவரது மகனும் வாரிசுமான இரண்டாம் சம்ஷேர் பகதூர் 1803 ஆம் ஆண்டு நடந்த ஆங்கிலேய-மராத்தியப் போரில் ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டார். [6] இவரது சந்ததியினர் அலி பகதூர் 1857 ஆம் ஆண்டு சிப்பாய் கிளர்ச்சியில் இராணி லட்சுமிபாயுடன் இணைந்து போராடினார். தோல்விக்குப் பிறகு, பண்டா மாநிலம் ஒழிக்கப்பட்டது. [7] . சம்ஷேர் பகதூரின் இன்றைய சந்ததியினர் மத்திய இந்தியாவில் ஒரு எளிய நடுத்தர வர்க்க வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 Bhawan Singh Rana (1 January 2005). Rani of Jhansi. Diamond. pp. 22–23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-288-0875-3.
- ↑ Rosemary Crill. The Indian Portrat, 1560–1860. Mapin Publishing Pvt Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89995-37-9.
- ↑ Mehta, J. L. (2005). Advanced study in the history of modern India, 1707-1813. Slough: New Dawn Press, Inc. p. 124. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781932705546.
- ↑ Henry Dodwell (1958). The Cambridge History of India: Turks and Afghans. CUP Archive. pp. 407–. GGKEY:96PECZLGTT6.
- ↑ "The Inwardness of British Annexations in India - Chidambaram S. Srinivasachari (dewan bahadur)". 2009-02-12. பார்க்கப்பட்ட நாள் 2015-06-21.
- ↑ Sarkar, Jadunath (1992-01-01). Fall of the Mughal Empire: 1789-1803 - Jadunath Sarkar. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780861317493. பார்க்கப்பட்ட நாள் 2015-06-21.
- ↑ https://www.livemint.com/mint-lounge/features/muslim-sons-of-a-brahmin-peshwa-11575604090939.html
பிரபலமான கலாச்சாரத்தில்
தொகு2019 ஆம் ஆண்டு பானிபட் என்ற பாலிவுட் படத்தில் இவரது பாத்திரத்தை சாஹில் சலதியா என்ற நடிகர் நடித்திருந்தார்.
வெளி இணைப்புகள்
தொகு- PESHWA (Prime Ministers) பரணிடப்பட்டது 2014-04-13 at the வந்தவழி இயந்திரம்
மேலும் படிக்க
தொகு- Ranjit Desai. Swami (in மராத்திய மொழி), a historical novel