கெர்சன் மாகாணம்
கெர்சன் மாகாணம் உக்ரைன் நாட்டின் மாகாணங்களில் ஒன்றாகும். இது உக்ரைனின் தெற்கில் கருங்கடலை ஒட்டி அமைந்துள்ளது. இது கிரிமியாவிற்கு வடக்கில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைநகரம் கெர்சன் நகரம் ஆகும். 28,461 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 10,16,707 மக்கள் தொகையும் கொண்ட கெர்சன் மாகாணத்தில், பழத்தோட்டங்கள் அதிக உள்ளதால், இதனை உக்ரைன் நாட்டின் பழக்கூடை என்று அழைக்கப்படுகிறது. உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது, உருசியர்கள் கெர்சன் மாகாணம் முழுவதையும் கைப்பற்றி, தனது கைப்பாவை ஆளுநரை நியமித்துள்ளது.
கெர்சன் மாகாணம்
Херсонська область | |
---|---|
மாகாணம் | |
கெர்சன்ஸ்கா மாகாணம்[2] | |
நாடு | உக்ரைன் (பெரிய அளவில் உருசியா ஆக்கிரமித்துள்ளது)[1] |
தலைநகரம் | கெர்சன் |
அரசு | |
• ஆளுநர் | ஹென்னடியு லகுதா[3] |
• உருசியா நியமித்துள்ள நிழல் ஆளுநர் | விளாடிமிர் சால்டோ பிளாக் [4] |
• கெர்சன் மாகாண சட்டமன்றம் | 64 இடங்கள் |
பரப்பளவு | |
• மொத்தம் | 28,461 km2 (10,989 sq mi) |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 10,16,707 |
• தரவரிசை | 22வது இடம் |
• அடர்த்தி | 36/km2 (93/sq mi) |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கத்திய ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கத்திய ஐரோப்பிய கோடை நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 73-75 |
ஏரியா குறியீடு | +380-55 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ISO 3166-2:UA |
வாகனத் தகடு பதிவு | ВT |
மாவட்டங்கள் | 18 |
நகரங்கள் | 9 |
மண்டல நகரங்கள் | 3 |
பேரூராட்சிகள் | 30 |
கிராமங்கள் | 658 |
FIPS 10-4 | UP08 |
இணையதளம் | www.oda.kherson.ua |
புவியியல்
தொகுகெர்சன் மாகாணத்தில் வடக்கில் தினிப்ரோவ்ஸ்க் மாகாணம், தெற்கில் சர்சைக்குரிய கருங்கடல் மற்றும் கிரிமியா தன்னாட்சிக் குடியரசும், மேற்கில் மைக்கோலைவ் மாகாணமும், கிழக்கில் அசோவ் கடல் மற்றும் சப்போரியா மாகாணமும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. கெர்சன் மாகாணத்தின் நடுவில் தினேப்பர் ஆறு வடக்கிலிருது, தெற்காக பாய்கிறது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2021-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, கெர்சன் மாகாணத்தின் மக்கள் தொகை 1,083,367 ஆகும். மக்கள் தொகையில் பெண்கள் 53.3% ஆகும். இதன் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 38 ஆக உள்ளது. இம்மாகாண மக்கள் தொகையில் 61.5% நகர்புறங்களில் வாழ்கின்றனர். இதன் 38.5% அல்லது 467,600 பேர் வேளாண்மைத் தொழில் செய்கின்றனர்.
- உக்ரைனிய மொழி பேசுவோர் - 82.0%
- உருசிய மொழி பேசுவோர் – 14.1%
- பெலேருஸ் மொழி பேசுவோர் – 0.7%
- மெஸ்கெட்டியன் துருக்கிய மொழி பேசுவோர் – 0.5%
- கிரிமிய தார்த்தர் மொழி பேசுவோர் – 0.5%
- பிறர்– 2.2%
உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு
தொகு2 மார்ச் 202 அன்றுஉக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் நடைபெற்ற கெர்சன் சண்டையின போது[5], 2 மார்ச் 202 அன்று உருசிய இராணுவம், கெர்சன் நகரத்தையும் கைப்பற்றியது.[6] பின்னர் 23 மார்ச் 2022 அன்று கெர்சன் மாகாணம் முழுவதையும் கைப்பற்றியது. கெர்சன் மாகாணத்தை நிர்வகிக்க உருசிய ஆதரவு ஆளுநரை இராணுவம் நியமித்துள்ளது. [7] [8]
நிர்வாகப் பிரிவுகள்
தொகுகெர்சன் மாகாணம் 18 மாவட்டங்களையும், 9 நகரங்களையும், 30 பேரூராட்சிகளையும், 658 கிராமங்களையும்கொண்டது. 2015-இல் கெர்சன் நகரத்தை 3 நகர்புற மாவட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[9]
பெயர் | உக்ரைனியப் பெயர் | பரப்பளவு (km2) |
மக்கள் தொகை 2015 |
நிர்வாகத் தலைமையிடம் | நகர்புற மக்கள் தொகை மட்டும் |
---|---|---|---|---|---|
கெர்சன் | Херсон (місто) | 423 | 333,737 | கெர்சன் | 322,260 |
ஹோல பிரிஸ்டன் | Гола Пристань (місто) | 9 | 14,883 | ஹோல பிரிஸ்டன் | 14,568 |
நோவா காக்கோவ்கா | Нова Каховкa (місто) | 223 | 68,205 | நோவா காக்கோவ்கா | 62,128 |
காக்கோவ்கா | Каховкa | 16 | 36,958 | காக்கோவ்கா | 36,958 |
பெர்ரிஸ்லாவ் மாவட்டம் | Бериславський (район) | 1,721 | 48,025 | பெர்ரிஸ்லோவ் | 16,682 |
பிலோசெர்கா மாவட்டம் | Білозерський (район) | 1,534 | 66,564 | பிலோசெர்கா | 9,739 |
சாப்லிங்கா மாவட்டம் | Чаплинський (район) | 1,722 | 35,219 | சாப்லிங்கா | 12,638 |
ஹெனிசெஸ்க் மாவட்டம் | Генічеський (район) | 3,008 | 59,991 | ஹெனிசெஸ்க் | 33,748 |
ஹோலா பிரிஸ்டன் மாவட்டம் | Голопристанський (район) | 3,411 | 45,827 | ஹோலா பிரிஸ்டன் | 14,666 |
ஹோர்னோஸ்தய்வ்விகா மாவட்டம் | Горностаївський (район) | 1,018 | 19,788 | ஹோர்னோஸ்தய்வ்விகா | 6,681 |
ஐவானிவ்கா மாவட்டம் | Іванівський (район) | 1,120 | 13,995 | ஐவானிவ்கா | 4,560 |
கலஞ்சக் மாவட்டம் | Каланчацький (район) | 916 | 21,568 | கலஞ்சக் | 11,169 |
காகோவ்கா மாவட்டம் | Каховський (район) | 1,450 | 35,968 | காகோவ்கா | N/A * |
நோவாடுராய்ட்ஸ்கே மாவட்டம் | Новотроїцький (район) | 2,298 | 35,921 | நோவாடுராய்ட்ஸ்கே | 14,979 |
நோவாவான்ட்சோவ்கா மாவட்டம் | Нововоронцовський (район) | 1,005 | 21,442 | நோவாவான்ட்சோவ்கா | 6,379 |
நியுஸ்னி சிரோஹோஸ்சி மாவட்டம் | Нижньосірогозький (район) | 1,209 | 15,985 | நியுஸ்னி சிரோஹோஸ்சி | 4,891 |
ஒலேஸ்கை மாவட்டம் | Олешківський (район) | 1,759 | 71,888 | ஒலேஸ்கை | 36,317 |
ஸ்கதோவ்ஸ்க் மாவட்டம் | Скадовський (район) | 1,456 | 47,930 | ஸ்கதோவ்ஸ்க் | 21,830 |
வெல்யுகா லெபெட்டிகா மாவட்டம் | Великолепетиський (район) | 1,000 | 16,827 | வெல்யுகா லெபெட்டிகா | 8,326 |
வேல்யுகா மாவட்டம் | Великоолександрівський (район) | 1,540 | 25,948 | வேல்யுகா ஒலெக்சந்திரிவ்கா | 9,747 |
வெர்கினியூ ரொஹாசிக் மாவட்டம் | Верхньорогачицький (район) | 915 | 12,003 | வெர்கினியூ ரொஹாசிக் | 5,698 |
விசோகோபில்லியா மாவட்டம் | Високопільський (район) | 701 | 15,121 | விசோகோபில்லியா | 6,148 |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Russia Says It Takes Control Of Ukraine's Entire Kherson Region". The Nation. March 15, 2022.
- ↑ Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia (ed.). Toponymic Guidelines for Map and Other Editors for International Use (PDF). scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-966-475-839-7. பார்க்கப்பட்ட நாள் 2020-10-06.
{{cite book}}
:|website=
ignored (help) - ↑ Zelensky replaces head of Kherson Regional State Administration, (27 அக்டோபர் 2021)
- ↑ "Kherson mayor refuses to cooperate with collaborators and invaders". Ukrinform. பார்க்கப்பட்ட நாள் 27 April 2022.
- ↑ Battle of Kherson
- ↑ Ukraine invasion: Russian forces capture city of Kherson, a strategic gain for Moscow
- ↑ Russian occupation of Kherson Oblast
- ↑ (in uk)Dzerkalo Tyzhnia. 3 January 2015. http://dt.ua/UKRAINE/lishe-3-ukrayinciv-hochut-priyednannya-yih-oblasti-do-rosiyi-160641_.html.
- ↑ "Population Quantity". UkrStat (in உக்ரைனியன்). பார்க்கப்பட்ட நாள் 7 January 2016.
வெளி இணைப்புகள்
தொகு- Portal of Kherson
- Site of Kherson nationalists
- State Administration of Kherson Region – official site (in உக்குரேனிய மொழி)
- Information Card of the Region – official site of the Cabinet of Ministers of Ukraine
- Promo-video about Kherson and South of Ukraine - official YouTube channel of The center of tourism and adventures "ХерсON"