குன்னத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு, உட்பட்ட சிற்றூர்

குன்னத்தூர் (Kunnathur) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் மத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு, உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

குன்னத்தூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635306

அமைவிடம்

தொகு

குன்னத்தூரானது மத்தூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 239 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

வரலாறு

தொகு

தொல்லியல் எச்சங்கள்

தொகு

குன்னத்தூரில் இருந்து கல்லாவி செல்லும் சாலையின் வலது புறத்தில், குன்னத்தூர் மேல் நிலைப் பள்ளியை அடுத்துள்ள ஈமக் காட்டில் 50 இக்கும் மேற்பட்ட கல்வட்ட வகைப் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் உள்ளன.[1]

பெயர் வரலாறு

தொகு

கிபி 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் குன்றத்தூர் மக்கள் பிராண உத்தார உலகன் என்பானுக்கு நிலம் கொடுத்தது குறிப்பிடபட்டுள்ளது. குன்றத்தூர் என்ற பெயரில் உள்ள றகரம் 'ன'கரமாகத் திரிந்து குன்னத்தூர் என பிற்காலத்தில் மருவியுள்ளது.[2]

ஆங்கிலேயர் காலம்

தொகு

ஆங்கிலேயர் காலத்தில், ஊத்தங்கரை வட்டத்தின் தலைநகர் நிர்வாக காரணங்களினால் மாற்றபட்டபோது சிறிது காலம் ஊத்தங்கரை வட்டத்தின் தலைநகராக குன்னத்தூர் இருந்தது.[3]

மக்கள்வகைப்பாடு

தொகு

2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 728 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 3090 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 1595, பெண்களின் எண்ணிக்கை 1495 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 60.1% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[4]

ஊரில் உள்ள கோயில்கள்

தொகு

மேற்கோள்

தொகு
  1. த. பார்திபன், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுத் தடயங்கள் தொகுதி-1 ஊத்தங்கரை வட்டம். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையம், ஒசூர். 2010 அக்டோபர். p. 23. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 118. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. த. பார்திபன், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுத் தடயங்கள் தொகுதி-1 ஊத்தங்கரை வட்டம். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையம், ஒசூர். 2010 அக்டோபர். p. 124. {{cite book}}: Check date values in: |year= (help)
  4. http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Mathur/Kunnathur