உருடால்ப் கொடுவா

உருடால்ப் கொடுவா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
லேட்சு
இனம்:
லே. லாங்கிசுபினிசு
இருசொற் பெயரீடு
லேட்சு லாங்கிசுபினிசு
வொர்த்திங்டான், 1932
வேறு பெயர்கள்
  • லேட்டிசு நிலோடிகசு லாங்கிசுபினிசு வொர்த்திங்டான், 1932

லேட்சு லாங்கிசுபினிசு என்பது உருடால்ப் கொடுவா அல்லது துர்கானா கொடுவா என்றும் அழைக்கப்படுகிறது. இது கென்யா மற்றும் எத்தியோப்பியாவில் உள்ள துர்கானா ஏரியில் (முன்னர் ருடால்ப் ஏரி என்று அழைக்கப்பட்டது) காணப்படும் உள்ளூர் அகணிய மீன் ஆகும்.[2] இது 57 சென்டிமீட்டர்கள் (22 அங்) நீளம் வரை வளரக்கூடியது.[2] லேட்சு லாங்கிசுபினிசு வணிக மீன்வளத்தில் முக்கியமானது. இது விளையாட்டு மீன் என்றும் அழைக்கப்படுகிறது. மீன் காட்சி வர்த்தகத்தில் இதன் பயன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை.

இதன் நிலையைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. இதன் விளைவாகப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இதைத் தரவுகள் போதாது என வகைப்படுத்துகிறது. ஆனால் கென்யாவின் மீன்வளத் துறையின் படி இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.[1]

நடத்தை

தொகு

உணவு

தொகு

உருடால்ப் கொடுவா ஏரியின் ஆழமான நீரில் வாழ்கிறது. ஏரிகளின் அடிப்பகுதியில் காணப்படும் இறால்களை உண்கிறது. நீர் நெடுவரிசையில் காணப்படும் மாப்பு மீன்கள் மற்றும் கூட்ட மீன்களை உண்கிறது.[1]

இனப்பெருக்கம்

தொகு

லே. லாங்கிசுபினிசு இனப்பெருக்கம் பற்றி அதிகம் அறியப்படவில்லை. இது ஏரியின் நடுவில் உள்ள திறந்த நீரில் சினை விடுகிறது. மேலும் பெற்றோரின் கவனிப்பு சாத்தியமில்லை. முட்டை மற்றும் இளம் உயிரிகள் மிதவை உயிரிகளாக நம்பப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Akinyi, E. (2006). "Lates longispinis". IUCN Red List of Threatened Species 2006: e.T60834A12416645. doi:10.2305/IUCN.UK.2006.RLTS.T60834A12416645.en. https://www.iucnredlist.org/species/60834/12416645. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. 2.0 2.1 "Lates longispinis". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. March 2017 version. N.p.: FishBase, 2017.