உன்னைப்போல் ஒருவன் (1965 திரைப்படம்)

ஜெயகாந்தன் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

உன்னைப்போல் ஒருவன் (Unnaipol Oruvan (1965 film)) என்பது 1965 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெயகாந்தன்[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபாகரன், காந்திமதி மற்றும் பலர் நடித்திருந்தனர். விமர்ச்சகர்களிடம் வரவேற்ப்பை பெற்ற இத்திரைப்படத்திற்கு 1965-ஆம் ஆண்டு 12-வது தேசிய விருது கிடைத்தது.[2] இத்திரைப்படத்தில் பாடல்கள் எதுவுமில்லை, பின்னணி இசையை சிட்டிபாபு அமைத்திருந்தார்.

உன்னைப்போல் ஒருவன்
இயக்கம்ஜெயகாந்தன்
தயாரிப்புஜெயகாந்தன்
ஆசிய ஜோதி பிலிம்ஸ்
கதைஜெயகாந்தன்
இசைசிட்டிபாபு
நடிப்புபிரபாகரன்
காந்திமதி
வெளியீடுபெப்ரவரி 27, 1965
நீளம்3362 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜெயகாந்தன் தான் எழுதிய உன்னைப்போல் ஒருவன் புதினத்தை அதே பெயரில் திரைப்படமாக இயக்கினார். விமர்ச்சகர்களிடம் வரவேற்ப்பை பெற்ற இப்படம் சோவியத் ஒன்றியத்திலும் திரையிடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை இப்படத்தின் பிரதிகள் ஏதும் இல்லாத நிலையில் இருந்தது. ஜெயகாந்தனின் 87 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் 2023, ஏப்ரல் 24 அன்று தேடி எடுத்து யூடியூபில் பிதிவேற்றினர்.[3]

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Sundararaj Theodore Baskaran (1 January 2009). History through the lens: perspectives on South Indian cinema. Orient Blackswan. p. 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-3520-6. பார்க்கப்பட்ட நாள் 2 August 2013.
  2. Hindustan Year-book and Who's who. M. C. Sarkar. 1966. p. 332. பார்க்கப்பட்ட நாள் 2 August 2013.
  3. மீண்டும் 'உன்னைப் போல் ஒருவன்' இந்து தமிழ் திசை, 30, ஏப்ரல் 2023

வெளி இணைப்புகள்

தொகு

யூடியூபில் உன்னைப் போல் ஒருவன் திரைப்படம்.