அல்பிரட் துரையப்பா

அல்பிரட் துரையப்பா (Alfred Duraiappah, இறப்பு: 27 சூலை 1975) என்பவர் இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் யாழ்ப்பாண நகர முதல்வரும் ஆவார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அரசியலில்

தொகு

அல்பிரட் துரையப்பா இலங்கை நாடாளுமன்றத்திற்காக மார்ச் 1960 இல் நடைபெற்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலத்தை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்[1]. பின்னர் அதே ஆண்டு சூலை மாதத்தில் நடந்த மறு தேர்தலிலும் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்[2]. 1965, 1970 தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார். பின்னர் இவர் இலங்கை சுதந்திரக் கட்சியில் இணைந்தார். யாழ்ப்பாண மாநகர சபை முதல்வராக நியமிக்கப்பட்டார்.

படுகொலை

தொகு

அல்பிரட் துரையப்பா 1975 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் நாள் யாழ்ப்பாணம் சுழிபுரம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய முன்றலில் வைத்து விடுதலைப் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுவே இலங்கைத் தமிழர் வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது அரசியல் கொலையாகும்[3].

மேற்கோள்கள்

தொகு
  1. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-07-12. பார்க்கப்பட்ட நாள் 2011-12-30.
  2. "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2011-12-30.
  3. Tamil Tiger chief in SEA? பரணிடப்பட்டது 2009-03-02 at the வந்தவழி இயந்திரம் New Straits Times - January 21, 2009

வெளி இணைப்புகள்

தொகு