கி. வி. வி. கன்னங்கரா

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:03, 27 மே 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (Quick-adding category "1969 இறப்புகள்" (using HotCat))

கிறிஸ்தோபர் வில்லியம் விஜயகோன் கன்னங்கரா (அக்டோபர் 14, 1884 - செப்டம்பர் 29, 1969) இலங்கையின் கல்வித்துறையின் தந்தையாக வர்ணிக்கப்படுகின்றார். இவரே இலங்கையில் இலவசக் கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட காரணமாக அமைந்தார். இவர் அம்பலாங்கொடை வெஸ்லி ஆங்கில உயர் பாடசாலையிலும் பின்பு காலி றிச்மன்ட் கல்லூரியிலும் கல்விபயின்றார். பின்னர் இவர் ஆசிரியராக மொரட்டுவை பிரின்ஸ் ஆப் வேல்ஸ் கல்லூரி போன்ற பாடசாலைகளில் கடமையாற்றினார். சட்டத்துறையில் தகுதிபெற்ற இவர் பின்பு காலியில் சட்டத்தரணியாகக் கடமையாற்றினார். 1919 ல் அரசியலில் நுழைந்து கொண்டார்.