மெகபூப் கான்

இந்தியத் திரைப்பட இயக்குநர்

மெகபூப் கான் (Mehboob Khan; பிறப்பு மெகபூப் கான் ரம்ஜான் கான் ; 9 செப்டம்பர் 1907 [1] - 28 மே 1964) இந்தியத் திரைப்படத்துறையின் முன்னோடி தயாரிப்பாளர்-இயக்குனர் ஆவார். சமூக காவியமான மதர் இந்தியா (1957) என்ற படத்தை இயக்கியதற்காக மிகவும் பிரபலமானவர். இது சிறந்த திரைப்படம்,சிறந்த இயக்குனர் உள்ளிட்ட பிலிம்பேர் விருதுகளை வென்றது. இரண்டு தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். [2] இவர் 1954 இல் தனது தயாரிப்பு நிறுவனமான மெஹ்பூப் புரொடக்ஷன்ஸ் என்பதையும் பின்னர் மெஹ்பூப் ஸ்டுடியோஸ், என்ற திரைப்பட படபிடிப்பு அரங்கத்தையும் மும்பையின் பாந்த்ராவில் நிறுவினார்.[3] இவர் அவுரத் (1940) மற்றும் மதர் இந்தியா, [4] ஆகியவற்றுடன் டகோயிட் திரைப்பட வகையை உருவாக்கினார். மேலும் காதல் நாடகமான அந்தாஸ் (1949), ஆன் (1952) , அமர் (1954) உட்பட பிற வெற்றி படங்களுக்காகவும் அறியப்படுகிறார். 1963ல் இந்திய அரசால் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.

மெகபூப் கான்
1940களின் ஆரம்பத்தில் மெகபூப் கான்
பிறப்புமெக்பூப் கான்
(1907-09-09)9 செப்டம்பர் 1907
பில்மோரா, பரோடா அரசு, பிரித்தானிய இந்தியா
இறப்பு28 மே 1964(1964-05-28) (அகவை 56)
மும்பை, இந்தியா
கல்லறைபடக்பர்ஸ்தான், மரைன் லைன்ஸ், மும்பை
பணிதிரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1931–1962
வாழ்க்கைத்
துணை
பாத்திமா (பிரிந்தனர்)
சர்தார் அக்தர்
பிள்ளைகள்4; ஒரு குழந்தையைத் தத்தெடுத்தார்

ஆரம்ப கால வாழ்க்கை

கான் 9 செப்டம்பர் 1907 அன்று பரோடா மாநிலத்தின் (தற்போது குசராத்து ) கன்தேவி தாலுகாவில் உள்ள பிலிமோராவில் மெகபூப் கான் ரம்ஜான் கான் எனப் பிறந்தார் [1]

செல்வாக்கு

1940கள், 1950கள் மற்றும் 1960களில் சுரேந்திரா, அருண் குமார் அஹுஜா, திலிப் குமார், ராஜ் கபூர், சுனில் தத், இராஜேந்திர குமார், ராஜ்குமார், நர்கிசு நிம்மி மற்றும் நதிரா போன்ற பெரிய நட்சத்திரங்களாகத் திகழ்ந்த பல நடிகர்கள் மற்றும் நடிகைகளை அறிமுகப்படுத்தினார். 1961 இல், இவர் 2 வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் நடுவர் குழுவில் உறுப்பினராக இருந்தார். [5] இந்திய திரைப்படக் கூட்டமைப்பு தலைவராகத் தொடர்ந்து இருந்தார். [6]

மெகபூப் கான் ஹாலிவுட்டின் தாக்கத்திற்கு ஆளாகியதாக அறியப்பட்டார். மேலும் இவரது படங்களில் பெரும்பாலும் ஹாலிவுட் பாணியில் ஆடம்பரமான அரங்கங்கள் இருந்தன. ஏழைகள் மீதான ஒடுக்குமுறை, வர்க்கப் போர் மற்றும் கிராமப்புற வாழ்க்கை ஆகியவை இவரது படைப்புகளில் தொடர்ச்சியான கருப்பொருள்கள்.

மெகபூப் கானுக்கு இந்திய அரசால் ஹிதாயத் கர்-இ-ஆசம் என்ற பட்டம் வழங்கப்பட்டது. [7]

தனிப்பட்ட வாழ்க்கை

மெகபூப் கான் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். [8] [9] இவரது முதல் மனைவி பாத்திமாவுடன், இவருக்கு அயூப், இக்பால் மற்றும் சவுகத் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். முதல் மனைவியிடமிருந்து பிரிந்த பிறகு, பிரபல இந்திய திரைப்பட நடிகை சர்தார் அக்தரை (1915-1986) 1942 இல் மணந்தார். இந்திய மற்றும் வெளிநாட்டு ஆங்கில படங்களில் நடித்த சஜித் கானை (பிறப்பு 28 டிசம்பர் 1951) இவர் தத்தெடுத்தார். [9]

இறப்பு மற்றும் மரபு

 
இவரது நூற்றாண்டு விழாவில் இந்திய அரசு வெளியிட்ட அஞ்சல் தலை

மெகபூப் கான் 28 மே 1964 அன்று மாரடைப்பால் இறந்தார் [9] இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு இறந்த மறுநாளே இவரது மரணம் நிகழ்ந்தது.[9] இவரது பிறந்த நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 2007 இல் மெகபூப் ஸ்டுடியோவில் நடைபெற்ற விழாவில் இந்திய அஞ்சல் துறை இவரது நினைவுஅஞ்சல் முத்திரைய வெளியிட்டது.<ref>"Postal stamp on Mehboob Khan to be released today". Indian Express. 30 March 2007. http://cities.expressindia.com/fullstory.php?newsid=229147. 

சான்றுகள்

  1. 1.0 1.1 Mehboob Khan பரணிடப்பட்டது 21 மே 2011 at the வந்தவழி இயந்திரம் at filmreference.com.
  2. "The 30th Academy Awards (1958) Nominees and Winners". oscars.org website. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 13 January 2021.
  3. A many-splendoured cinema.
  4. Eastern Westerns: Film and Genre Outside and Inside Hollywood.
  5. "2nd Moscow International Film Festival (1961)". MIFF. Archived from the original on 16 January 2013. பார்க்கப்பட்ட நாள் 4 November 2012.
  6. "Presidents of Film Federation of India". Film Federation of India. pp. 1–2. Archived from the original on 11 September 2014. பார்க்கப்பட்ட நாள் 28 June 2014.
  7. "Mehboob Khan - a profile" இம் மூலத்தில் இருந்து 17 ஆகஸ்ட் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160817114707/http://www.tamashha.com/celeb/Mehboob_Khan. 
  8. "Historic Mehboob Studio ticks away in anonymity". https://www.hindustantimes.com/entertainment/historic-mehboob-studio-ticks-away-in-anonymity/story-0r0JIpwPLWaX169YVljo4L.html. 
  9. 9.0 9.1 9.2 9.3 "Mehboob Khan - a profile" இம் மூலத்தில் இருந்து 17 ஆகஸ்ட் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160817114707/http://www.tamashha.com/celeb/Mehboob_Khan. "Mehboob Khan - a profile".

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெகபூப்_கான்&oldid=4156312" இலிருந்து மீள்விக்கப்பட்டது