மொழி
இந்தக் கட்டுரை 'Mayooranathan' எனும் பயனரால் தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக சூன் 01, 2017 அன்று முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. அருள்கூர்ந்து, வேறு எவரும் 10 நாட்களுக்கு இக்கட்டுரையில் எதுவித தொகுப்புக்களையும் செய்யவேண்டாம். இக்கட்டுரை 10 நாட்களுக்கு மேல் குறிப்பிட்ட பயனரால் தொகுக்கப்படாதிருப்பின், இங்கிருக்கும் வார்ப்புருவை நீக்கிவிட்டு, வேறொருவர் இந்தக் கட்டுரையைத் தொகுக்கலாம். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மொழி (language) என்பது சிக்கலான தொடர்பாடல் முறைமைகளைப் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்குமான வல்லமை ஆகும். குறிப்பாக இது இதற்கான மனித வல்லமையைக் குறிக்கும். தனியான ஒரு மொழி மேற்குறித்த முறைமை ஒன்றுக்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது ஒரு தொகுதி குறியீடுகளையும், அவற்றை முறையாகக் கையாளுவதற்கான விதிமுறைகளையும் உள்ளடக்குகிறது. மொழி பற்றிய அறிவியல் அடிப்படையிலான கற்கை "மொழியியல்" எனப்படும். சொற்கள் அனுபவங்களைப் பிரதிபலிக்கின்றனவா என்பது போன்ற மொழி மெய்யியல் சார்ந்த விடயங்கள் குறித்துப் பண்டைய கிரேக்கத்தில் ஜார்சியாசு, பிளேட்டோ ஆகியோர் காலத்திலிருந்தே விவாதிக்கப்பட்டு வந்தன. மொழி உணர்வுகளில் இருந்து தோற்றம் பெற்றதாக ரூசோ போன்ற சிந்தனையாளர்கள் கருதினர். காந்த் போன்றவர்கள் அறிவார்ந்ததும், ஏரணம் சார்ந்தனவுமான சிந்தனைகளில் இருந்தே மொழி தோன்றியது என்றனர். 20 ஆம் நூற்றாண்டின் மெய்யியலாளரான விட்யென்சுட்டீன் என்பார் மெய்யியல் என்பது உண்மையில் மொழி பற்றிய ஆய்வே என வாதிட்டார்.
மனித மொழி உற்பத்தித்திறன், இடப்பெயர்ச்சி ஆகிய இயல்புகளைக் கொண்டது. அத்துடன் அது சமூக மரபுகள், கற்றல் ஆகியவற்றில் முழுமையாகத் தங்கியுள்ளது. இதன் சிக்கலான அமைப்பு, எந்தவொரு விலங்குத் தொடர்பாடல் முறைமையையும் விட மிகப் பரந்த வெளிப்பாட்டு எல்லைகளைக் கொண்டிருக்கும் வாய்ப்பையும் அளித்துள்ளது. தொடக்ககால ஒமிமின்கள் தமது உயர் விலங்குத் தொடர்பாடல் முறைமைகளைப் படிப்படியாக மாற்றி, பிற அறிவுக் கோட்பாட்டை உருவாக்கும் திறனைப் பெற்று, முன்னே இல்லாத ஒன்றைக் காணும் பொதுக் கற்பனைத் திறனும் வளர்ந்த போது மொழி தோன்றியதாகக் கருதப்படுகிறது.[1][2]
மனிதருடைய மொழிகளில், ஒலியும், கை அசைவுகளும், குறியீடுகளாகப் பயன்படுகின்றன. இவ்வாறான ஒலிகளை எழுத்து வடிவமாக மாற்றமுடியும். ஆனால் சைகைகளை அவ்வாறு மாற்ற முடியாது. மனிதருடைய மொழிகளில் இக்குறியீடுகள் சொற்கள் என்றும், அவற்றைக் கையாள்வதற்கான விதிகள் இலக்கணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
"மொழி ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி எனக்கூறுவது முழுமையாகக் கூறப்படாத ஒரு விளக்கமாகும். மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, சமூகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்கநெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படை விளக்கமாகவும் உள்முகச் செய்திகளாகவும் கொண்டு விளங்குகிறது."[3]
மனித மொழியானது இயற்கையான மொழியாகும் (natural language).மொழியினை கற்க முற்படும் அறிவியலுக்கு மொழியியல் (linguistics) எனப்பெயர். மொழியின் வளர்ச்சிப்பாதையாக பேச்சு, எழுத்து, புரிதல், மற்றும் விளக்கம் எனும் படிகளைக்கொண்டது. மனிதர்களின் பயன்பாட்டுக்காக இயற்கை மொழிகளின் இலக்கணங்களையும் சொற்களையும் இணைத்து புதிய மொழி ஒன்றை உருவாக்கும் முயற்சிகளும் நடந்துள்ளன. இத்தகைய மொழிகளில் எசுபரந்தோ குறிப்பிடத்தக்க தாகும்.
மொழியானது பிறப்பு, இறப்பு, வளர்ச்சி, இடம்பெயர்தல், மற்றும் காலத்திற்கேற்ற மாற்றம் என பன்முகம் கொண்டதாக உள்ளது. எந்த ஒரு மொழி மாற்றத்திற்கோ அல்லது மேன்மையுறதலுக்கோ இடங்கொடாமல் இருக்கிறதோ அம்மொழி இறந்தமொழி (Dead language) எனப்படும். மாறாக எந்த ஒரு மொழி தொடர்ந்து காலத்திற்கேற்றாற்போல் தனக்குள் மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறதோ அம்மொழி வாழும் மொழியாக (Living language) கருதப்படும். ஆடலாலோ பாடலாலோ உணர்த்தப்படும் மொழி பேச்சொலி (Phonology) வகைக்குள் அடங்குகின்றது.
மொழி
உலகில் ஏறத்தாழ 6000 மொழிகள் தொடக்கம் 7000 மொழிகள் வரை இருக்கக் கூடும் என அறிஞர்கள் கூறுகின்றனர். ஒரு மொழி காலப்போக்கில் மாற்றம் பெற்று கிளைமொழிகளாகப் பிரிகின்றது. இத்தகைய மொழிகள் ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என அழைக்கப்படுகின்றன. இன்றைய உலகில் பேசப்படும் பெரும்பாலான மொழிகள் இந்தோ-ஐரோப்பிய, சீன-திபெத்திய குடும்பங்களைச் சேர்ந்தவை. தற்போது பேசப்படும் மொழிகளில் பல இந்நூற்றாண்டுக்குள் அழியும் நிலையில் உள்ளன.
இந்தியாவின் நான்கு மொழிக் குடும்பங்கள்
- தமிழ் மொழிக் குடும்பம்
- இந்திய-ஐரோப்பிய மொழிகள்
- திபெத்திய-பர்மிய மொழிகள்
- இந்திய-ஆரிய மொழிகள்
இந்திய-ஆரிய மொழிகள்
வட இந்திய மொழிகள் பல இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. இன்று உள்ள பெரும்பாலான வட மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியனவே.
திராவிட மொழிக் குடும்பம்
இந்தியாவில் உள்ள முக்கிய மொழி குடும்பங்களின் ஒன்று திராவிட மொழிக் குடும்பம், இதில் மூத்த மொழி தமிழ் மொழி ஆகும்.