வாருங்கள்!

வாருங்கள், Semmal50, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--நந்தகுமார் (பேச்சு) 18:35, 16 திசம்பர் 2013 (UTC)Reply

தலைப்புகளில் பட்டம்

வணக்கம், நபர் ஒருவரைப் பற்றிய கட்டுரைகளின் தலைப்பில் முனைவர், பேராசிரியர், சர், டாக்டர் போன்ற அந்நபரின் பட்டங்கள் சேர்க்கப்படுவதில்லை. அவ்வழக்கம் தமிழ் மட்டுமல்ல, எந்த மொழி விக்கிப்பீடியாக்களிலும் இல்லை.--Kanags \உரையாடுக 04:46, 3 சனவரி 2014 (UTC)Reply

புதிய விக்கி படிவமைப்பு

தொகு என்னும் குறிப்புடன் வரும் பகுப்புப் பிரிப்பு இல்லாமல் செய்திகளைத் தெளிவாகப் பகுத்துக் காட்டும் இவரது முறைமை (அடிக்கோடு போட்டு வெளிப்படச் செய்யும் முறைமை)பிறராலும் பின்பற்றப்படவேண்டிய ஒன்று.

இதனை விக்கி முறைமை இல்லை என ஒதுக்கினால் அது விக்கியின் வளர்ச்சியைப் பாதிக்கும். --Sengai Podhuvan (பேச்சு) 20:41, 10 சனவரி 2014 (UTC)Reply

மன்னிக்க வேண்டும் செங்கை பொதுவன் ஐயா, அவ்வாறான வழக்கம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது. அது விக்கித் தொழிநுட்பத்துக்கும் மாறானது.--Kanags \உரையாடுக 22:13, 10 சனவரி 2014 (UTC)Reply

நைப்பால்

நைப்பால் குறித்த கட்டுரையை ஆரம்பித்தமைக்குப் பாராட்டுகள். கட்டுரையில் சில திருத்தங்கள் செய்திருக்கிறேன். அவற்றைக் கவனியுங்கள். அதற்கேற்ப இனிமேல் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 09:28, 27 சனவரி 2014 (UTC)Reply

நன்றி ஐயா--Semmal50 (பேச்சு) 05:30, 2 பெப்ரவரி 2014 (UTC)

சில குறிப்புகள்

வணக்கம் ஐயா, தங்களை நேரில் கண்டு அளவளாவியதில் மகிழ்ச்சி. நினைவுக்குறித்தாள் என்ற பக்கம் தங்களுடைய கட்டுரைகளை வடிவமைக்க உதவும். மேலும் வார்ப்புரு:தகவற்சட்டம் நபர், வார்ப்புரு:தகவல் சட்டம் எழுத்தாளர் ஆகிய பக்கங்களையும் காணுங்கள். இவற்றிலிருந்து எடுத்தாளப்படும் வார்ப்புருவானது நபர்கள் பற்றிய கட்டுரையில் மிக எளிமையாக அவர்களைப் பற்றிய தகவல்களைப் படிப்பவர்களுக்கு எளிதாக தர உதவும். வே. வசந்தி தேவி கட்டுரையில் தகவற்சட்டம் நபர் வார்ப்புருவை இணைத்துள்ளேன். அக்கட்டுரையில் தொகு பொத்தானைச் சொடுக்கி நான் செய்துள்ள மாற்றங்களைக் காணுங்கள். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:51, 3 பெப்ரவரி 2014 (UTC)

வேண்டுகோள்

தொகு என்னும் குறிப்புடன் வரும் பகுப்புப் பிரிப்பு இல்லாமல் தகவலைப் பகுத்துக் காட்ட அடிக்கோடு இடும் முறையை அருள்கூர்ந்து இனிமேல் கட்டுரைகளில் சேர்க்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். அது விக்கி நடைமுறையல்ல. விக்கித் தொழில்நுட்பத்துக்கும் மாறானது. இவ்வாறு எழுதப்படும் கட்டுரைகளுக்கு வார்ப்புரு:விக்கியாக்கம் இடப்படும்.--Kanags \உரையாடுக 11:25, 15 மார்ச் 2014 (UTC)

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், Semmal50!

 
நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--✍mohamed ijazz © (பேச்சு) 14:10, 31 மார்ச் 2014 (UTC)

வேண்டுகோள்...!

ஐயா, வணக்கம்! தமிழ் விக்கியில் தங்களின் பங்களிப்பிற்கு மிக்க நன்றி! தனபால் (ஓவியர்) எனும் கட்டுரையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் கவனியுங்கள். அடுத்த கட்டுரையை இதேபோன்ற வடிவமைப்பில் எழுத முயற்சி செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:34, 2 ஏப்ரல் 2014 (UTC)

விக்கியிடை இணைப்புகள்

நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளுக்கு (இருப்பின்) மறக்காமல் விக்கியிடை இணைப்புகளை ஏற்படுத்திவிடுங்கள். பார்க்க: உதவி:விக்கியிடை இணைப்புகள் --AntonTalk 06:33, 8 ஏப்ரல் 2014 (UTC)

புரியவில்லை; விக்கியிடை இணைப்புகள் என்றால் என்ன என்பதை விளக்க வேண்டுகிறேன்.~~
ஒரு கட்டுரைக்கு பிற மொழி விக்கியியினை(களை) இணைப்பது. எ.கா: ஆல்பர்ட் சுவைட்சர் கட்டுரை பிற மொழி விக்கிகளுடன் இணைக்கப்பட வேண்டும். en:Albert Schweitzer என்ற ஆங்கிலக் கட்டுரை தமிழ் தவிர்ந்த பல மொழிக் கட்டுரைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதை அங்கு வலப்பக்கமுள்ள "Languages" விக்கியிடை இணைப்புகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதனையும் பாருங்கள்: விக்கிப்பீடியா:விக்கித்தரவுகள் --AntonTalk 15:33, 8 ஏப்ரல் 2014 (UTC)

மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்

வணக்கம், Semmal50!

 

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 12:28, 2 மே 2014 (UTC)Reply

எந்த செம்மல்?

நீங்கள் அறிவியல் தமிழ் மன்றத்தின் செம்மலா? [1] --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:55, 6 மே 2014 (UTC) இல்லை,ஐயா. நான் சென்னையில் வாழ்ந்து வருபவன்.வைப்பகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவன். தமிழ் மொழி,தமிழ் இன ஆர்வலன். ~~Reply

உங்கள் கவனத்திற்கு

வணக்கம். விக்கிப்பீடியாவில் தொடர்ந்து கட்டுரைகள் உருவாக்கி வருகிறீர்கள். உங்களுக்கு எனது பாராட்டுகள். உங்களது சில கட்டுரைகளில் ’விக்கியாக்கம்’ தொடுப்பிணைப்பி இணைக்கப்பட்டு பின்னர் அவை பிற பயனர்களால் விக்கி நடைக்கேற்றவாறு மாற்றம் செய்யப்படுகின்றன. அவ்வாறு மேற்கொள்ளப்படும் மாற்றங்களைக் கவனித்து அதனை அடுத்து நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் பயன்படுத்தினால் கட்டுரைகள் மேலும் சிறப்பாக மேம்பாட்டுடன் அமையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:47, 22 மே 2014 (UTC)Reply

பதக்கம்

  சிறந்த உரைதிருத்துனர் பதக்கம்
நீங்கள் பல கட்டுரைகளையும் கவனித்துச் சிறப்பாக உரை திருத்துவதைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். குறிப்பாக, சந்திப் பிழை குறித்த திருத்தங்கள் நன்று. இது தொடர்பாக மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கும் வழிகாட்டும் குறிப்புகளை வழங்கினால் நன்று. நன்றி. இரவி (பேச்சு) 04:38, 7 சூன் 2014 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி.~~

  விருப்பம் தங்கள் உரைதிருத்தல் பணி என்னை வியக்க வைத்தது. இவற்றை வாசித்து உரைதிருத்தப் பொறுமையும் நிதானமும் வேண்டும். தாங்கள் தொடந்தும் நன்முறையிற் பங்களித்து வருவதைக்கண்டு மட்டற்ற மகிழ்ச்சி!
நீங்கள் பேச்சுப்பக்க உரையாடலின் போது கையெழுத்திடுவதைப் பற்றி இங்கு வாசித்து அறிந்துகொள்ளலாம். வாழ்த்துக்கள்!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 06:13, 8 சூன் 2014 (UTC)Reply
மிக்க   விருப்பம். ஒவ்வொரு நாள் காலையிலும் கட்டுரைகளில் உங்களின் திருத்தங்களை காண்கிறோம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:34, 27 சூன் 2014 (UTC)Reply
  விருப்பம் மிகத் தேவையான, சிறப்பானப் பணி. மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும் !! வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 04:39, 27 சூன் 2014 (UTC)Reply
  விருப்பம்--✍ மொஹம்மத் இஜாஸ் ☪ ® (பேச்சு) 04:43, 27 சூன் 2014 (UTC)Reply
  விருப்பம், நான் எழுதியவற்றிலும் பிழைகளைத் திருத்தி உதவியிருக்கிறீர்கள். நன்றி! தமிழ் விக்கியில் மிகச் சிறந்த எழுத்து நடையைக் கொண்டோரில் நீங்கள் முதன்மையானவர்!! :) என்னுடைய எழுத்து நடையில் திருத்தம் செய்து உதவி வந்தால் மேம்படுத்திக் கொள்வேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:09, 26 சூலை 2014 (UTC)Reply

பாராட்டுகளுக்கு என் மனமார்ந்த நன்றி.~~

தி. பொ. வேதாசலம் - தலைப்பு

தி. பொ. வேதாசலம் கட்டுரையை சரியான தலைப்பிற்கு நகர்த்தியுள்ளேன். தி.பொ. வேதாசலம் என்றிருப்பது தவறு, தி. பொ. வேதாசலம் என்றிருப்பதே சரியானது. மேலும் விபரங்களுக்கு விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு பக்கத்தைப் பாருங்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:45, 2 ஆகத்து 2014 (UTC)Reply

முதற்பக்க அறிமுகம் வேண்டல்

வணக்கங்க. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/செம்மல் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி.--இரவி (பேச்சு) 13:30, 9 ஆகத்து 2014 (UTC)Reply

நன்றி.நீங்கள் கேட்டதற்கிணங்க என்னைப் பற்றிய குறிப்புகளைத் தந்துள்ளேன்.~~
நன்றிங்க. வழமையான அறிமுகப்பாணியை ஒட்டி விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/செம்மல் பக்கத்தைச் சற்று திருத்தி உள்ளேன். உங்கள் ஒளிப்படத்தைச் சேர்த்தாலும் நன்றாக இருக்கும். உங்கள் விக்கிப்பணி பற்றிய குறிப்புகளையும் இங்கு இற்றைப்படுத்தி வரலாம். இரண்டு, மூன்று மாதங்களில் உங்கள் அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருகிறோம். --இரவி (பேச்சு) 20:13, 11 ஆகத்து 2014 (UTC)Reply

உதவி...

எஸ். இராமநாதன் எனும் கட்டுரையின் வடிவமைப்பில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. உதவ வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:32, 29 ஆகத்து 2014 (UTC)Reply

பத்திப் பிரித்து தலைப்புத் தந்து வடிவமைக்க வேண்டுமா? தெளிவுப் படுத்த வெண்டுகிறேன்.

`` பொது வாழ்க்கை எனும் தலைப்பினை துணைத் தலைப்புகளாக பிரித்து, உதவுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:53, 29 ஆகத்து 2014 (UTC)Reply

ஐயா! நீங்கள் தெரிவித்த வண்ணம் செய்துள்ளேன். பார்க்க வேண்டுகிறேன்.~~

மிகவும் அருமையாக செய்தமைக்கு மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:15, 13 செப்டம்பர் 2014 (UTC)

ஐயம்...

வணக்கம்! இதழிகைப் பணி என்பது சரியா? விளக்க வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:49, 25 திசம்பர் 2014 (UTC) வணக்கம்! பத்திரிக்கை என்பதற்குத் தமிழில் இதழிகை என்று அறிஞர்கள் பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்றோர் பயன்படுத்துவர். --பயனர்:செம்மல்50Reply

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

 
அனைவரும் வருக

வணக்கம் Semmal50!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:30, 30 திசம்பர் 2014 (UTC)Reply

”விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு” பற்றிய திட்டம் குறித்து அறிந்து மகிழ்கிறேன். ஒரு பயனர் மட்டும் சனவரித் திங்களில் மட்டும் 100 தொகுப்புகள் எழுதவேண்டுமா? அவ்வாறாயின் ஒரு பயனர் சராசரியாக நாள் ஒன்றுக்கு 3 அல்லது 4 கட்டுரைகளை எழுதவேண்டும். நான் புரிந்துகொண்டது சரியா? தெரிவிக்கக் கோருகிறேன். ~~செம்மல்50

தாங்கள் மகிழக் கண்டு மகிழ்கிறேன். :) , தவாறாகவே புரிந்துள்ளீர்கள். ஒரு பயனர் சனவரி மாதத்தில் 100 தொகுப்புக்கள் செய்ய வேண்டும். "தொகுப்பு" என்பது கட்டுரைகளைக் குறிக்கவில்லை. ஒரு கட்டுரையில் செய்யப்படும் சிறு மாற்றம் கூட ஒரு தொகுப்பாகும். சராசரியாக நாளொன்றுக்கு 3.## தொகுப்புக்களை ஒரு பயனர் செய்தால் இவ்விலக்கை எட்டமுடியும். தற்போது புரிந்ததா??, இல்லையெனில் வினவவும். உதவக் காத்திருக்கிறேன். --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 08:52, 30 திசம்பர் 2014 (UTC)Reply
மேலும், குறிப்பிடத்தக்க தொகுப்பாக இருக்கவும் நாம் முயற்சி செய்கிறோம் என்பதனை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். தரம் நமது முக்கியக் குறிக்கோள் என்பதனை தாங்கள் அறிவீர்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:57, 30 திசம்பர் 2014 (UTC)Reply
நிச்சயமாக, சிவகுருநாதன், முதல் நாளில் நான் செய்யப்போகும் தொகுப்புகளின் குறிப்பிடத்தகதன்மையை நிலைநாட்ட முயல்வேன். சனவரி மாதத்தில் நான் செய்யும் தொகுப்புக்களில் இத்திட்டத்துக்கு செய்யும் தொகுப்புக்கள் குறிப்பிடத்தக்கவையே :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 09:01, 30 திசம்பர் 2014 (UTC)Reply

இந்தத் திட்டத்தில் கலந்து கொள்வேன்.~~செம்மல்50

நன்றிகள், நீங்கள் புகுபதிய மறந்து விட்டீர்கள் போலும்........--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:32, 30 திசம்பர் 2014 (UTC)Reply
செம்மல் வாழ்த்துக்கள்............, தொடர்ந்தும் நேரம் கிடைக்கையில் பங்களித்து விக்கித்தரத்தை உயர்த்துங்கள்..... --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 09:01, 1 சனவரி 2015 (UTC)Reply
வணக்கம் செம்மல், வழமை போலவே இம்மாதம் உங்கள் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும். இம்மாதமும் தொடர்ந்தும் மேலும் பல முனைப்பான பங்களிப்பாளர்களை உருவாக்குவது தொடர்பான உங்கள் ஆலோசனைகளை இங்கு தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:53, 16 சனவரி 2015 (UTC)Reply

நண்பர் இரவி அவர்களுக்கு நன்றி. தங்களின் ஊக்க உரைகள் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. ~~செம்மல்50

சிறப்புப் பதக்கம்

  சிறப்புப் பதக்கம்
செம்மல் அவர்களே!, தாங்கள் இவ்வரிய திட்டத்தில் தங்கள் பங்களிப்பைச் செலுத்தி 100 தொகுப்புக்களை மேற்கொண்ட பயனர்களுள் ஒருவராகத் திகழ்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் பங்களிப்பைக் கௌரவிக்கும் முகமாக இப்பதக்கைத்தை தங்களுக்கு அளிக்கிறேன், அத்தோடு தங்கள் ஆர்வம், பங்களிப்புகள் சிறப்பாக உள்ளன. கருத்துக்களும் கேள்விகளும் பயனுள்ள வகையில் கேட்கிறீர்கள். தங்களைப் போன்ற ஒருவரைப் பெற்றதில் இச்சமூகமே உவகை கொள்ளும். வாழ்த்துக்களும் நன்றிகளும். --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:04, 9 சனவரி 2015 (UTC)!...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:11, 1 சனவரி 2015 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்படவில்லை

நன்றிகள் பல. ~~செம்மல்50

//முதல் நாளிலேயே நான் போட்டியிட்டு பதக்கமும் பெற்றேன். ஆனால் பட்டியலில் என் பெயர் இடம் பெறவில்லையே! ~~செம்மல்50//
செம்மல் அவர்களே!, 100 தொகுப்புக்கள் செய்யும் இலக்கைத் தாங்கள் (07:27, 6 சனவரி 2015 (வேறுபாடு | வரலாறு) . . (+36)‎ . . சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி) அடைந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்!--ஸ்ரீதர் (பேச்சு) 03:42, 10 சனவரி 2015 (UTC)Reply

முதற்பக்க அறிமுக வாழ்த்துகள்

வணக்கங்க. அடுத்த இரு வாரங்களுக்கு உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 07:23, 29 சனவரி 2015 (UTC) இரவி அவர்களுக்கு நன்றி. ~~செம்மல்50Reply

வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 08:44, 29 சனவரி 2015 (UTC)Reply
வாழ்த்துகள் !! உங்கள் பங்களிப்புக்களால் மிகுந்த பயனடைந்துள்ள--மணியன் (பேச்சு) 09:39, 29 சனவரி 2015 (UTC)Reply
தங்களின் பங்களிப்புகளுக்கு எனது நன்றிகள், ஐயா! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:00, 29 சனவரி 2015 (UTC)Reply
பங்களிப்புகளை தொடர்ந்து வழங்க வாழ்த்துக்கள் ஐயா! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:30, 2 பெப்ரவரி 2015 (UTC)
  விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:00, 2 பெப்ரவரி 2015 (UTC)
வாழ்த்துக்கள் ஐயா --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 10:23, 2 பெப்ரவரி 2015 (UTC)

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. ~~செம்மல்50

சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு:பிலிப்பீன்சு

வணக்கம் செம்மல் ஐயா! சிகரம் திட்டத்தினூடாக விரிவாக்கப்பட்ட பிலிப்பீன்சு கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக நியமிப்பதற்கு இப்பக்கத்தில் முன்மொழிந்துள்ளேன். நீங்கள் இக்கட்டுரையில் சொற்பிழை, இலக்கணப்பிழைகள் என்பவற்றைச் சரிபார்த்துத் திருத்தி உதவினால் பேருதவியாக அமையும். திருத்தும் போது ஆங்கிலக் கட்டுரையையும் கவனத்திற் கொள்ளுங்கள். கட்டுரையின் பராமரிப்புப் பணிக்காக இப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் கட்டுரையின் ஏதாவது ஒரு பகுதி நீங்கள் உரைதிருத்திச் சொற்பிழை, இலக்கணப்பிழைகள் சரிபார்க்கப்பட்டதாகக் கருதினால் இங்கு கையொப்பமிட்டு உதவுங்கள். இவ்வாறு செய்வது அனைத்து விக்கிப்பீடியர்களும் ஒன்றிணைந்து உரைதிருத்தத்தை மேற்கொள்ள வசதியாக இருக்கும். உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவியுங்கள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:19, 10 பெப்ரவரி 2015 (UTC)

உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க பிலிப்பீன்சு கட்டுரையைப் படித்துப் பார்த்து, பிழைகள் ஏதேனும் இருப்பின் திருத்த முயல்கிறேன். ~~செம்மல்50

ஆங்கில விக்கிப்பிடியாவில் எழுதப் பட்டுள்ள செய்திகளையும் விதயங்களையும் அவ்வாறே வாக்கியத்துக்கு வாக்கியம் தமிழில் மொழி மாற்றம் செய்யப் பட்டுள்ளதை அறிந்து கொண்டேன். அதன் அமைப்பை முழுமையாக மாற்றாமல் சொல் பிழைகள் எழுத்துப் பிழைகள் ஆகியவற்றை மட்டும் திருத்தலாம். ஆனால் சில இடங்களில் தமிழ் மொழியின் இயல்பான நடைக்கு மாறாக எழுதப் பட்டுள்ளதால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. எடுத்துக்காட்டாக 'சுகாதாரம்' என்னும் பத்தியில் HIV-POSITIVE என்பதை நேருக்கு நேராக மொழி பெயர்ப்பு செய்யாமல் நாம் புரிந்து கொள்ளும் முறையில் இயல்பான மொழி நடையில் அந்த வாக்கியத்தை மாற்றி எழுதலாம் என்று எண்ணுகிறேன். இது தொடர்பான கருத்தை நீங்கள் தெரிவிக்க வேண்டுகிறேன். ~~செம்மல்50
ஆம் ஐயா நீங்கள் கூறியபடி ஆங்கிலக் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்தே பிலிப்பீன்சு கட்டுரையை விரிவாக்கினேன். நாம் புரிந்து கொள்ளும் முறையில் இயல்பான மொழி நடையில் வாக்கியங்களை மாற்றக்கூடியதாக இருந்தால்; பொருள் திரிபடையாமல் மாற்றி எழுதி உதவுங்கள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 12:38, 11 பெப்ரவரி 2015 (UTC)
செம்மல் ஐயா பிலிப்பீன்சு கட்டுரையை உரைதிருத்தி உதவிவருகின்றமைக்கு நன்றி. கட்டுரையின் ஏதாவது ஒரு பகுதி உரைதிருத்திச் சொற்பிழை, இலக்கணப்பிழைகள் சரிபார்க்கப்பட்டதாக நீங்கள் கருதினால் இங்கு கையொப்பமிட்டு உதவுங்கள். இவ்வாறு செய்வது அனைத்து விக்கிப்பீடியர்களும் ஒன்றிணைந்து உரைதிருத்தத்தை மேற்கொள்ள வசதியாக இருக்கும். உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவியுங்கள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 08:09, 1 மார்ச் 2015 (UTC)

பயனர் பெயரில் கட்டுரைகள்

வணக்கம், பயனர் பெயர்களில் கட்டுரைகள் இருக்க முடியாது. சில புதிய பயனர்கள் தங்களைப் பற்றிய தகவல்களை அறிந்தோ அறியாமலோ தமது பயனர் பக்கத்தில் அல்லாமல், தமது பெயர்களிலேயே கட்டுரைகளை உருவாக்கி விடுகிறார்கள். அக்கட்டுரைகளை இனம் காணும் போது அவற்றை அவர்களின் பயனர் பெயர்வெளிக்கு வழிமாற்ற வேண்டும். கட்டுரைத் தலைப்பில் நீக்கல் வார்ப்புருவை சேர்த்து விடுங்கள்.--Kanags \உரையாடுக 20:36, 16 பெப்ரவரி 2015 (UTC)

குறிப்பிடத்தக்க நூல்களா என்பதை கருத்தில் கொள்க

வணக்கம் ஐயா, சமீபத்தில் நீங்கள் தொகுத்திருந்த சமற்கிருத ஆதிக்கம் (நூல்) கட்டுரையைக் கண்டேன். தமிழில் உள்ள அனைத்து நூல்களையும் கலைகளஞ்சியத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியமில்லை என்று தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நூல் கட்டுரைகளை குறிப்பிடத்தக்கமையாக நிறுபனம் செய்யாமல் அவற்றை நீக்கம் செய்துள்ளார்கள். எனவே சமற்கிருத ஆதிக்கம் நூல் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அந்நூல் குறித்து உரையாடிள்ள இரண்டிற்கும் மேற்பட்ட அச்சு ஊடகங்களை மேற்கோளாக தர வேண்டுகிறேன். இல்லையென்றால் குறிப்பிடத்தக்கமை வார்ப்புரு இக்கட்டுரையில் இடம்பெறும். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். அத்துடன் தற்போது நீங்கள் இடுகின்ற கையெழுத்தானது சரியான இணைப்புடன் இல்லை, எனவே --~~~~ என்ற குறியீட்டினை கையெழுத்தினை இட பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 00:56, 26 மார்ச் 2015 (UTC)

நண்பர் ஜெகதீசுவரனுக்கு நன்றி. இந்நூலின் சிறப்புக் குறித்து தமிழ் விக்கிப்பீடியா அறிஞர்கள் முடிவு செய்யலாம். --Semmal50 (பேச்சு) 12:26, 26 மார்ச் 2015 (UTC)

மா. நன்னன் கட்டுரையில் ஆதாரங்கள் இணைக்க வேண்டுதல்

வணக்கம் ஐயா, மா. நன்னன் கட்டுரையில் இரு இடங்களில் ஆதாரங்களை இணைக்க கோரியிருக்கிறேன். அவற்றிக்கு தக்க ஆதாரங்கள் கிடைத்தால் இணைக்கவும். இதன் மூலம் அக்கட்டுரையின் தரம் மேலும் கூடும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:34, 29 மார்ச் 2015 (UTC)

பெண்கள் வரலாற்று மாதப் பதக்கம்

  2015 பெண்கள் வரலாற்று மாதப் பதக்கம்
2015 பெண்கள் வரலாற்று மாதக் கட்டுரைகளில் சிறப்பான பங்களித்தமைக்காக இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். தொடர்ந்து பெண்கள் சார்பான கட்டுரைகளில் பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 12:14, 1 ஏப்ரல் 2015 (UTC)
  விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 06:48, 2 ஏப்ரல் 2015 (UTC)

Translating the interface in your language, we need your help

Hello Semmal50, thanks for working on this wiki in your language. We updated the list of priority translations and I write you to let you know. The language used by this wiki (or by you in your preferences) needs about 100 translations or less in the priority list. You're almost done!
 
எல்லா விக்கிகளுக்கும் மொழிபெயர்ப்புகளைச் சேர்க்க அல்லது மாற்ற, மீடியாவிக்கி உள்ளூராக்கல் திட்டமான translatewiki.net ஐப் பயன்படுத்துக.

Please register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:07, 26 ஏப்ரல் 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:49, 7 மே 2015 (UTC)Reply

இட ஒதுக்கீடு

வணக்கம்! இட ஒதுக்கீடு எனும் கட்டுரை முழுவதுமாக சொந்தக் கருத்துகளைக் கொண்டிருந்த காரணத்தினால், நீக்கிவிட்டேன் (கலைக்களஞ்சியக் கட்டுரையன்று என்பதாக). கடுமையான விருப்பு-வெறுப்புகளை இக்கட்டுரை கொண்டிருந்தது! இந்தக் கட்டுரையில் 10க்கும் மேற்பட்ட தொகுப்புகளை பிழை திருத்தும் கண்ணோட்டத்தில் தாங்கள் செய்திருந்தபடியால் இதனை தங்களுக்கு தெரிவிக்கின்றேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:19, 10 மே 2015 (UTC)Reply

கலைக்களஞ்சியக் கட்டுரை அமைப்பையொட்டி மாற்றி அமைக்கலாம் என்று எண்ணியிருந்தேன். நீங்கள் செய்தவரை சரிதான். நன்றி.--Semmal50 (பேச்சு) 05:28, 10 மே 2015 (UTC)Reply

இந்தியாவில் இட ஒதுக்கீடு எனும் கலைக்களஞ்சியக் கட்டுரை ஏற்கனவே நமது தமிழ் விக்கியில் உள்ளது!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:46, 10 மே 2015 (UTC)Reply

செய்தி தெரிவித்தமைக்கு நன்றி,ஐயா.--Semmal50 (பேச்சு) 07:23, 10 மே 2015 (UTC)Reply

வலைபூக்களை நீக்கவும்

வலைபூக்களை விக்கியில் கட்டுரைப் பக்கத்தில் போடக்கூடாது என விதியுள்ளது. அவை அனைவற்றையும் நீக்கிடவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:57, 19 மே 2015 (UTC)Reply

இணையத்தில் google நிறுவனம் இயக்கித்தரும் wordpress, blogspot, ஆகிய தளங்களில் wordpress தளத்தில் உள்ள செய்திகளுக்குத் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. நறவங்கொடி இதனைப் பின்பற்றி blogspot தளத்திலுள்ள அரிய, சான்றுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கட்டுரைகளுக்கும் வெளியிணைப்பு தருதல் முறையாகும். இந்த அடிப்படையில் என் பணி தொடர்கிறது. --Semmal50 (பேச்சு) 15:59, 5 அக்டோபர் 2015 (UTC)Reply

அவை நம்பகத் தனமையானவை அல்ல. பார்க்க: விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை, விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் --AntanO 16:17, 5 அக்டோபர் 2015 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

 
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--Kanags \உரையாடுக 12:23, 8 சூலை 2015 (UTC)Reply

உளங்கனிந்த நன்றி!

 

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:23, 25 சூலை 2015 (UTC)Reply

உதவி

வணக்கம். எட்வர்டு செயித் கட்டுரையில் தகவற்பெட்டியை இணைத்திருக்கிறேன். அதில் ஆங்கிலத்திலுள்ள சில விவரங்களைத் தமிழாக்கம் செய்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:11, 2 ஆகத்து 2015 (UTC)Reply

மாரத்தான் தொகுப்புப் புள்ளிவிபரம்

உங்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி. நீங்கள் பங்களித்த புள்ளிவிவரம் இங்கே உள்ளது --நீச்சல்காரன் (பேச்சு) 17:26, 9 ஆகத்து 2015 (UTC)Reply

செய்திக்கு நன்றி.--Semmal50 (பேச்சு) 14:00, 10 ஆகத்து 2015 (UTC)Reply

வாழ்த்துகள்

மறக்கப்பட்ட கவிஞர் தமிழ்ஒளி பற்றிய தங்கள் கட்டுரையைக் கண்டு பெரிதும் மகிழ்கிறேன்.வாழ்த்துகள். தோழர், கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் பெயரை அவைஞர் அவர்கள் பயன்படுத்தியது போலவே இணைத்தே எழுதிட அன்புடன் வேண்டுகிறேன். -Dr.Ezhilvendan (பேச்சு) 10:01, 29 ஆகத்து 2015 (UTC)Reply

 Y ஆயிற்று--Kanags \உரையாடுக 10:33, 29 ஆகத்து 2015 (UTC)Reply

குறிப்பிடத்தக்கமை, நூல்கள்

நூல்கள் பற்றிய கட்டுரைகள் இந்த வழிகாட்டலுடன் ஒத்துப் போகின்றதா என்பதைக் கவனியுங்கள். அல்லாவிடில் அவ்வாறான கட்டுரைகள் நீக்கப்படலாம். ஒரு நூலையோ அதற்கு ஆதாரமாகக் கொள்ள முடியாது. (புத்தகம் தன்னகத்தே அல்லாமல், சுயாதீனமான பிரசுரிக்கப்பட்டதும் சாதாரணமற்றதுமான இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூலகங்களில் கூறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.) --AntanO 03:52, 1 நவம்பர் 2015 (UTC)Reply

தங்கள் அறிவுறுத்தலை மனத்தில் கொண்டேன். நூலைப் பற்றிய வேறு பிரசுரங்கள் அல்லது மேற்கோள்கள் இருந்தால் அவற்றைக் காட்டுவேன்.--Semmal50 (பேச்சு) 09:17, 1 நவம்பர் 2015 (UTC)Reply

உசாத்துணைகள்

வணக்கம். கட்டுரைகளில் வெளி இணைப்புகள் பாவனை அக்கட்டுரைக்கு சான்றாக. உசாத்துணைகள் அல்லது மேற்கோள்கள் மூலமே அதனை உறுதிப்படுத்த வேண்டும். மேற்கோள் சுட்டுவதில் உதவி தேவையெனின் இதனைப் பாருங்கள். நன்றி. --AntanO 04:14, 9 நவம்பர் 2015 (UTC) வணக்கம். மேற்கோள் சுட்டுவதில் நான் பிழை செய்கிறேன் என உங்கள் இந்தக் குறிப்பு மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. எத்தகைய பிழை என்பதை எடுத்துக் காட்டுகள் மூலம் தெரிவித்தால் பயனடைவேன்.--Semmal50 (பேச்சு) 09:19, 9 நவம்பர் 2015 (UTC)Reply

விருது பெற்றோர் கட்டுரையாக்கம்

ஐயா! பல அறிஞர்களின் கட்டுரைகளை உருவாக்கியுள்ளீர்கள். நன்றி. அந்த வழியில், வார்ப்புரு:பத்ம விபூசண் விருதுகள் என்ற வார்ப்புருவில், பல கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டியுள்ளது. சில கட்டுரைகளையாவது நீங்கள் உருவாக்க வேண்டும் எனக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 07:43, 22 நவம்பர் 2015 (UTC)Reply

வார்ப்புரு தோன்றி ஒரு நொடியில் மறைந்து விடுகிறது. எனவே பட்டியலைப் படிக்க முடியவில்லை. உதவ வேண்டுகிறேன்.--Semmal50 (பேச்சு) 12:21, 22 நவம்பர் 2015 (UTC)Reply

வார்ப்புருவின் வலப்பக்க மேன்மூலையில் உள்ள "காட்டு" என்பதைச் சொடுக்கினால் பட்டியல் தோன்றும். --மதனாகரன் (பேச்சு) 13:18, 22 நவம்பர் 2015 (UTC)Reply
வார்ப்புரு பேச்சு:பத்ம விபூசண் விருதுகள் என்பதில், உருவாக்கப்பட வேண்டிய கலைத்துறைப் பெயர்களை மட்டும் இட்டுள்ளேன். இன்னும் இதுபோல பத்து துறைகள் உள்ளன.--உழவன் (உரை) 17:52, 22 நவம்பர் 2015 (UTC)Reply

ரகுநாத் மகபத்ர என்னும் கட்டுரையில் மூன்று முறை வார்ப்புரு இடப்பட்டுள்ளது. காண்க. திருத்துக.--Semmal50 (பேச்சு) 01:13, 1 திசம்பர் 2015 (UTC)Reply

அவர் பத்மசிறீ, பத்மபூசண், பத்ம விபூசண் என மூன்று விருதுகளையும் பெற்றுள்ளதால், ஒரே நிறமுடைய மூன்று இந்திய அரசு வார்ப்புருக்களையும் இணைத்துள்ளேன்,--உழவன் (உரை) 01:19, 1 திசம்பர் 2015 (UTC)Reply

பத்மசிறீ

Request

Greetings.

Could you create in Tamil Wikipedia, the article en:Baku Zoo?

Thank you.

Menikure Talk 19:30, 9 December 2015‎‎ (UTC)

மகிழ்ச்சி...

 
வரலாற்றில் நீங்கள்..

சனவரி 9 அன்று தங்களை சந்தித்ததில் மனம் மகிழ்ந்தேன்; உதவிக்கு தயங்காமல் அணுகவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:29, 9 சனவரி 2016 (UTC)Reply

நன்றி. மகிழ்ச்சி. உரையாடுவோம்.--Semmal50 (பேச்சு) 01:43, 10 சனவரி 2016 (UTC)Reply

பி. எஸ். கைலாசம்

வணக்கம்! பேச்சு:பி. எஸ். கைலாசம் எனும் பக்கத்தில் தங்களுக்கு செய்தியொன்று உள்ளது; பி. எஸ். கைலாசம் எனும் கட்டுரையை இன்னமும் விரிவுபடுத்திய பிறகு, பேச்சுப் பக்கத்தில் தங்களின் கருத்தினைத் தெரிவியுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:19, 12 சனவரி 2016 (UTC)Reply

உரியன செய்யப்பட்டன; கட்டுரையையும், பேச்சுப் பக்கத்தையும் இப்போது பார்வையிடுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:28, 13 சனவரி 2016 (UTC)Reply

ஐயம்...

நீதிபதி நாகப்பன் இப்பதவியில் 2016 அக்டோபர் மாதம் மூன்றாம் பக்கல் வரை இருப்பார் என எழுதியுள்ளீர்கள். பக்கல் என்பதன் பொருள் என்ன? அறிந்துகொள்ள ஆர்வம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:58, 8 பெப்ரவரி 2016 (UTC)

தமிழ் விக்சனரியில் பொருள் வேறுபடுகிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:24, 8 பெப்ரவரி 2016 (UTC)

பக்கல் = நாள், திகதி. நாள் என்பதும் நல்ல தமிழ்ச் சொல்லே. அதனையே பயன்படுத்தினால், எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்குமே? --மதனாகரன் (பேச்சு) 07:30, 8 பெப்ரவரி 2016 (UTC)
@Selvasivagurunathan m: பொருள் வேறுபடவில்லையே? எதனைச் சொல்கின்றீர்கள்? --மதனாகரன் (பேச்சு) 07:31, 8 பெப்ரவரி 2016 (UTC)
மதனாகரன் கூறுவது போல முடிந்த வரையில் எளிமையான சொற்களைப் பயன்படுத்தல் வேண்டும்.--Kanags \உரையாடுக 07:51, 8 பெப்ரவரி 2016 (UTC)

தேதி என்பதும் திகதி என்பதும் தமிழ்ச் சொற்கள் அல்ல. நாள் என்றும் பக்கல் என்றும் வழங்கலாம். பக்கல் என்பது மிகவும் சரியான சொல். இது தேவநேயப் பாவாணர் புழங்கவிட்ட சொல் ஆகும். புதிய சொற்கள் பயன்பாட்டுக்கு வருதல் நல்லதுதானே!--Semmal50 (பேச்சு) 08:23, 8 பெப்ரவரி 2016 (UTC)--Semmal50 (பேச்சு) 08:24, 8 பெப்ரவரி 2016 (UTC)

  எதிர்ப்பு. நாள் என்ற நல்ல எளிமையான தமிழ்ச் சொல் இருக்கும் போது பக்கல் என்ற விளங்காத சொல்லை ஏன் பயன்படுத்த வேண்டும்? பயன்பாட்டில் உள்ள சொற்கள் தமிழ்ச் சொற்களாக இல்லாவிடில் புதிய சொற்களைப் பயன்படுத்தலாம். மேலும், பக்கல் என்பதற்கு நாள் என்பதைத் தவிர்த்து மேலும் இரண்டு விளக்கங்கள் இருக்கும் போது எதற்காக அதனைப் பயன்படுத்த வேண்டும். கவிதைகளில் பாக்களில் பயன்படுத்துவது வேறு.--Kanags \உரையாடுக 09:14, 8 பெப்ரவரி 2016 (UTC)

ஏற்கனவே இங்குக் கூறியவாறு நாள் என்பது இனிய எளிய தமிழ்ச் சொல். திகதி, தேதி ஆகிய இரண்டும் சமசுக்கிருதச் சொல்.' டே' என்னும் ஆங்கிலச் சொல் தருகிற பொருள் கொண்டது நாள். பகலும் இரவும் கொண்டது ஒரு நாள்.

'இன்றிலிருந்து எட்டாம் நாள்' எனச் சொல்லும்போது தெரிவிக்கப்படுகிற கருத்து வேறு. 'செப்டம்பர் எட்டாம் நாள்' எனச் சொல்லும்போது தெரிவிக்கப் படுகிற கருத்து வேறு. இதைக் கருத்தில் கொண்டு DATE என்னும் சொல்லுக்குப் பக்கல் என பாவாணர் உருவாக்கினார். 'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்' எனவே புதிய சொல் பழகப் பழக எளியதாகிவிடும். நமஸ்காரம், அக்ராசனர், விவாக சுப முகூர்த்தம், மகாமகோபாத்யாய, சர்வகலாசாலை போன்ற சமசுக்கிருத சொற்கள் வழக்கிழந்து போய் அவற்றிற்கான தமிழ்ச் சொற்கள் புழக்கத்திற்கு வந்து விட்டன. எனவே விளங்காத சொற்கள் புரியாத சொற்கள் என நினைக்க வேண்டாவெனக் கோருகிறேன். திகதி தேதி ஆகிய சொற்களைத் தவிர்க்கலாம். நாள் என்பதைப் பயன்படுத்தலாம். பக்கல் என்பதையும் அறிமுகப்படுத்தி எழுதிப் பரப்பலாம். --Semmal50 (பேச்சு) 16:15, 8 பெப்ரவரி 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Semmal50&oldid=2018997" இலிருந்து மீள்விக்கப்பட்டது