தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Kanags (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:06, 26 நவம்பர் 2014 அன்றிருந்தவாரான திருத்தம் (Mohamed ijazzஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)

வார்ப்புரு:Infobox political party v2 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (Tamil National Alliance) என்பது இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டணியாகும். இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணத் தமிழ் மக்களிடையே இக்கட்சி பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ளது. இக்கூட்டமைப்பில் இலங்கையின் மிதவாதத் தமிழக் கட்சிகள், மற்றும் முன்னாள் போராளிக் குழுக்கள் அங்கம் வகிக்கின்றன. 2001 ஆம் ஆண்டில் இருந்து இக்கூட்டமைப்பு தேர்தல்களில் பங்குபற்றி வருகிறது.

இலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சியை இக்கூட்டமைப்பு ஆரம்பத்தில் வலியுறுத்தி வந்திருந்தாலும், 2010 ஆம் ஆண்டில் சுயாட்சிக் கோரிக்கையைக் கைவிட்டு, பிராந்திய தன்னாட்சி அமைப்பை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது.[1]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வாக தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை ஆதரித்து வந்தது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கி. சிவநேசன், ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இக்கொலைகளை இலங்கை அரசாங்கமே செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

கூட்டமைப்பு உருவாக்கம்

2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் 2001 அக்டோபர் 20 இல் நான்கு கட்சிகள் இணைந்து இக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

  1. தமிழர் விடுதலைக் கூட்டணி
  2. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
  3. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப் - சுரேஷ் அணி)
  4. தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓர் அரசியல் கட்சியாக இலங்கை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாமையினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் சூரியன் சின்னத்தில் 2001 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 15 இடங்களைக் கைப்பற்றியது.

தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பின்னர் கூட்டமைப்பில் இருந்து விலகின. தமிழர் விடுதலைக் கூட்டணியின் சில அங்கத்தவர்கள் இரா. சம்பந்தனின் தலைமையில் கூட்டமைப்பில் தொடர்ந்து இயங்கினர். இவர்கள் முடக்கி வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தமது கட்சியாக ஏற்றனர். இக்கட்சியின் வீட்டுச் சின்னத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்களில் போட்டியிட்டது. 2013 ஆம் ஆண்டில் வீ. ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகியன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேர்ந்து கொண்டன. 2013 ஆம் ஆண்டில் பின்வரும் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன:

  1. இலங்கைத் தமிழரசுக் கட்சி
  2. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப் - சுரேஷ் அணி)
  3. தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)
  4. தமிழர் விடுதலைக் கூட்டணி
  5. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)

நாடாளுமன்றத் தேர்தல்கள்

2001 நாடாளுமன்றத் தேர்தல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முதற் தடவையாக 5 டிசம்பர் 2001 தேர்தலில் போட்டியிட்டது. இரா. சம்பந்தன் தலைமையில் 3.88% வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 225 இடங்களில் 15 இடங்களைக் கைப்பற்றியது.

தேர்தல் மாவட்டங்கள் வாரியாக ததேகூ வென்ற வாக்குகளும், இடங்களும்:

தேர்தல்
மாவட்டம்
வாக்குகள் % இடங்கள் செலுத்தப்பட்ட
மொத்த வாக்குவீதம்
ததேகூ உறுப்பினர்கள்
அம்பாறை 48,789 17.41% 1 82.51% அரியநாயகம் சந்திரநேரு (தவிகூ)
மட்டக்களப்பு 86,284 48.17% 3 68.20% ஜி. கிருஷ்ணபிள்ளை (தகா)
யோசப் பரராஜசிங்கம் (தவிகூ)
தம்பிராஜா தங்கவடிவேல் (டெலோ)
கொழும்பு 12,696 1.20% 0 76.31%
யாழ்ப்பாணம் 102,324 54.84% 6 31.14% வீரசிங்கம் ஆனந்தசங்கரி (தவிகூ)
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தகா)
நடராஜா ரவிராஜ் (தவிகூ)
மாவை சேனாதிராஜா (தவிகூ)
எம். கே. சிவாஜிலிங்கம் (டெலோ)
அ. விநாயகமூர்த்தி (தகா)
திருகோணமலை 56,121 34.83% 1 79.88% இரா. சம்பந்தன் (தவிகூ)
வன்னி 41,950 44.39% 3 46.77% செல்வம் அடைக்கலநாதன் (டெலோ)
சிவசக்தி ஆனந்தன் (ஈபிஆர்எல்எஃப்)
இராசா குகனேசுவரன் (டெலோ)
தேசியப் பட்டியல் 1 மு. சிவசிதம்பரம் (தவிகூ), 2002 சூன் 5 இல் காலமானார்.
இவருக்குப் பதிலாக க. துரைரத்தினசிங்கம் (தவிகூ) தேர்ந்தெடுக்கப்பட்டார்.)
மொத்தம் 348,164 3.88% 15 76.03%
மூலம்:"Parliamentary General Election 2001, Final District Results". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.

2004 நாடாளுமன்றத் தேர்தல்

தேர்தல்
மாவட்டம்
வாக்குகள் % இடங்கள் செலுத்தப்பட்ட
மொத்த வாக்குவீதம்
ததேகூ நாஉ
அம்பாறை 55,533 19.13% 1 81.42% க. பத்மநாதன், இறப்பு 21 மே 2009
தோமஸ் தங்கதுரை வில்லியம், 12 சூன் 2009 இலிருந்து
மட்டக்களப்பு 161,011 66.71% 4 83.58% சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி
த. கனகசபை
தங்கேஸ்வரி கதிராமன்
கிங்க்ஸ்லி ராசநாயகம், ஏப்ரல் 2004 இல் பதவி துறப்பு
பா. அரியநேத்திரன், 18 மே 2004 இலிருந்து
யாழ்ப்பாணம் 257,320 90.60% 8 47.38% செல்வராஜா கஜேந்திரன்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (அஇதகா)
சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எஃப்)
நடராஜா ரவிராஜ் (இதக), 10 நவம்பர் 2006 இல் படுகொலை
மாவை சேனாதிராஜா (இதக)
எம். கே. சிவாஜிலிங்கம் (ரெலோ)
கி. சிவநேசன், 6 மார்ச் 2008 இல் படுகொலை
பத்மினி சிதம்பரநாதன்
நல்லதம்பி சிறீகாந்தா (ரெலோ), 30 நவம்பர் 2006 இலிருந்து
சொலமன் சிரில், 9 ஏப்ரல் 2008 இலிருந்து
திருகோணமலை 68,955 37.72% 2 85.44% இரா. சம்பந்தன் (இதக)
க. துரைரத்தினசிங்கம் (இதக)
வன்னி 90,835 64.71% 5 66.64% செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ)
சிவசக்தி ஆனந்தன் (ஈபிஆர்எல்எஃப்)
சதாசிவம் கனகரத்தினம்
சிவநாதன் கிசோர்
வினோ நோகராதலிங்கம் (ரெலோ)
தேசியப் பட்டியல் 2 எம். கே. ஈழவேந்தன், நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்காததால் 14 டிசம்பர் 2007 இல் வெளியேற்றப்பட்டார்
ஜோசப் பரராஜசிங்கம் (இதக), 24 டிசம்பர் 2005 இல் படுகொலை
சந்திர நேரு சந்திரகாந்தன், 27 செப்டம்பர் 2006 முதல்
ரசீன் முகம்மது இமாம், 5 பெப்ரவரி 2008 முதல்)
மொத்தம் 633,654 6.84% 22 75.96%
Source:"Parliamentary General Election 2004, Final District Results". Department of Elections, Sri Lanka.

2010 நாடாளுமன்றத் தேர்தல்

2010 ஏப்ரல் 8 இல் இடம்பெற்ற தேர்தல்களில் மகிந்த ராசபக்ச தலைமையில் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி வெற்றி பெற்றது. இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2.9% வாக்குகளைப் பெற்று, 14 இடங்களைக் கைப்பற்றியது.

ததேகூ வென்ற தேர்தல் மாவட்டங்கள்

தேர்தல்
மாவட்டம்
வாக்குகள் % இடங்கள் செலுத்தப்பட்ட
மொத்த வாக்குவீதம்
ததேகூ நாஉ
அம்பாறை 26,895 10.47% 1 64.74% பி. பியசேன
மட்டக்களப்பு 66,235 36.67% 3 58.56% பா. அரியநேத்திரன்
பொன். செல்வராசா
சீ. யோகேஸ்வரன்
யாழ்ப்பாணம் 65,119 43.85% 5 23.33% சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எஃப்)
ஈ. சரவணபவன்
மாவை சேனாதிராஜா (இதக)
சி. சிறீதரன்
அ. விநாயகமூர்த்தி
திருகோணமலை 33,268 23.81% 1 62.20% இரா. சம்பந்தன் (இதக)
வன்னி 41,673 38.96% 3 43.89% செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ)
சிவசக்தி ஆனந்தன் (ஈபிஆர்எல்எஃப்)
வினோ நோகராதலிங்கம் (ரெலோ)
தேசியப் பட்டியல் 1 எம். ஏ. சுமந்திரன்
மொத்தம் 233,190 2.90% 14 61.26%
Source:"Parliamentary General Election – 2010". Department of Elections, Sri Lanka.

மாகாணசபைத் தேர்தல்கள்

2008 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றவில்லை. 2013 இல் நடைபெற்ற 1வது வட மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

2012 கிழக்கு மாகாணசபைத் தேர்தல்

2012 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு மொத்தமுள்ள 37 இடங்களில் 11 இடங்களைக் கைப்பற்றியது.[2]

தேர்தல்
மாவட்டம்
வாக்குகள் % இடங்கள் செலுத்தப்பட்ட
மொத்த வாக்குவீதம்
ததேகூ மாகாணசபை உறுப்பினர்கள்
அம்பாறை 44,749 16.28% 2 66.10% இராஜேசுவரன் முருகேசு, தவராசா கலையரசன்
மட்டக்களப்பு 104,682 50.83% 6 64.29% ராசையா துரைரத்தினம், கிருஷ்ணபிள்ளை துரைராஜசிங்கம், கோவிந்தன் கருணாகரம், மார்க்கண்டு நடராசா, இந்திரகுமார் நித்தியானந்தம், ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை
திருகோணமலை 44,396 29.08% 3 66.83% சிங்காரவேலு தண்டாயுதபாணி, குமாரசாமி நாகேசுவரன், ஜெகதீசன் ஜெனார்த்தனன்
தேசியப் பட்டியல் 0
மொத்தம் 193,827 30.59% 11 61.26%

2013 வடக்கு மாகாணசபைத் தேர்தல்

2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று 1வது வட மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றியது.[3]

தேர்தல்
மாவட்டம்
வாக்குகள் % இடங்கள் செலுத்தப்பட்ட
மொத்த வாக்குவீதம்
ததேகூ மாகாணசபை உறுப்பினர்கள்
யாழ்ப்பாணம் 213,907 84.37% 14 64.15% க. வி. விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், இம்மானுவேல் ஆனல்ட், சி. வி. கே. சிவஞானம், பா. கஜதீபன், எம். கே. சிவாஜிலிங்கம், பொ. ஐங்கரநேசன், ச. சுகிர்தன், கே. சயந்தன், விந்தன் கனகரத்தினம், அரியகுட்டி பரஞ்சோதி, ஆ. க. சர்வேஸ்வரன், வே. சிவயோகன்
கிளிநொச்சி 37,079 81.57% 3 73.17% பசுபதி அரியரத்தினம், தம்பிராசா குருகுலராசா, சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை
மன்னார் 33,118 62.22% 3 74.22% பிரிமூஸ் சிராய்வா, பாலசுப்பிரமணியம் டெனிஸ், ஜி. குணசீலன்
வவுனியா 41,225 66.10% 4 72.28% ப. சத்தியலிங்கம், க. தா. லிங்கநாதன், ம. தியாகராஜா, ஆர். இந்திரராசா
முல்லைத்தீவு 28,266 78.56% 4 70.56% அன்டனி ஜெயநாதன், சிவப்பிரகாசம் சிவயோகன், துரைராஜா ரவிகரன், கனகசுந்தரம்சுவாமி வீரவாகு
கூடுதல் இடங்கள் 2 அஸ்மின் அயூப் (மன்னார்), மேரி கமலா குணசீலன் (முல்லைத்தீவு)
மொத்தம் 353,595 78.48% 30 67.52%

மேற்கோள்கள்

  1. Tamils give up on independence. 14 March 2010. Al Jazeera.
  2. "Provincial Council Elections 2012: Eastern Province". இலங்கை தேர்தல் திணைக்களம்.
  3. "Provincial Council Elections 2013 : Northern Province". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.

வெளி இணைப்புகள்