அலெக்சாந்தர் துபியான்ஸ்கி
டுபியான்சுகி அலெக்சாண்டர் (Dr. Dubyyanskiy Alexander) என்பவர் ரஷ்யத் தமிழ் பேராசிரியராவர். இவர் ரஷ்யாவில் மொசுகோ மாநில பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியப் பேராசிரியரும் ஆவார். அத்துடன் தமிழ் மொழி மீது மிகுந்த பற்றுக்கொண்ட இவர், தமிழ் மொழியை சரளமாக பேசவும் கூடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பணி
தற்போது மொசுகோ மாநில பல்கலைக் கழகத்தில் தமிழ் மற்றும் இந்திய இலக்கியப் பேராசிரியராக பணி புரிந்து வரும் இவர், [1]உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புகளை உரையாடி வருபவர்களில் ஒருவராவார். குறிப்பாக மேல்நாட்டு மொழியாய்வாளர்களிடையே தமிழ் மொழியின் இலக்கியப் பயன்பாட்டிற்கும், பேச்சு வழக்கிற்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகளை எடுத்தியம்புவதுடன், தமிழ்நாட்டு பேச்சு தமிழில் உரையாடவும் கூடியவர்.[2]