பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்/தொகுப்பு 04: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தமிழ்க்குரிசில் பக்கம் பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில் என்பதை பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்/தொகுப்பு 04 என்பதற்கு நகர்த்தினார்: பல செய்திகள் வ
 
(7 பயனர்களால் செய்யப்பட்ட 14 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 544:
::நன்றி மாதவன்! இவற்றில் கிட்டத்தட்ட 1/10 பங்கு கட்டுரைகள் தானியக்க முறையில் ஏற்றப்பட்டவை. தவிரவும், சொற்களை மட்டும் கணக்கிட்டால் 5000 பைட்டுகளுக்கு அதிகமாக ஒரு 500 கட்டுரைகள் தான் எழுதியிருப்பேன். ஏனையவற்றை மேம்படுத்தினால் தான், உங்கள் பதக்கத்தை பெற்ற திருப்தி ஏற்படும். ஊக்கப்படுத்தியதற்கு நன்றி! :)-[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 14:34, 7 பெப்ரவரி 2016 (UTC)
:வாழ்த்துகள்! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 03:30, 14 பெப்ரவரி 2016 (UTC)
:நன்றி [[பயனர்:Selvasivagurunathan m|சிவகுரு]] அவர்களே -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 20:36, 16 சூலை 2018 (UTC)
 
== உதவி ==
வரி 882 ⟶ 883:
:::நீங்கள் உங்கள் கணக்கில் இயக்கிப் பாருங்கள். எனது தானியங்கி கணக்கில் இயக்கினாலும் அது மேற்கூறிய வழுவோடு தான் உள்ளதை அறிய முடியும். நான் பைத்தான்3 கற்று வருகிறேன். அதனால் யாவா மொழி கற்கும் சூழ்நிலை தற்போது இல்லை. அவசரமில்லை. சீர் செய்த பின்பு இதனை பைத்தானுக்கு மாற்றும் சிந்தனை உள்ளது. உங்களுக்கு பைத்தான் தெரிந்தால், அவர் செய்தவரை மாற்றித் தந்தீர்கள்என்றாலும், இரட்டிப்பு மகிழ்ச்சி. முடிந்தால் நேரம் இருக்கும் போது அழைக்கவும். உங்களுடன் பேசி வெகுநாட்கள் ஆகிறது.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 02:43, 18 மே 2018 (UTC)
:::[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%3A%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&type=revision&diff=2525761&oldid=2525755 இந்த மாற்றம்] செய்த பிறகு தான் இந்த உரையாடல் பகுதியைத் திறக்க முடிகிறது. இல்லையெனில், முழுபக்கத்தினையும் திறந்தே பிறகு தொகுக்க முடிகிறது. --[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 02:49, 18 மே 2018 (UTC)
 
== தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்! ==
 
வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. <mark>இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும்.</mark> ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.
 
<big>போட்டியில் பங்கு கொள்ள '''[[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி|இங்கு]]''' வாருங்கள்</big>. இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் [[விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி|போட்டியின் பேச்சுப் பக்கத்தில்]] தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]])
<!-- Message sent by User:Ravidreams@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Ravidreams/lists/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&oldid=2530114 -->
 
== வேங்கைத் திட்டம் - தமிழ் முந்துகிறது ==
 
வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் கட்டுரைகள் எழுதி வருவோர் அனைவருக்கும் பொதுவான செய்தி.
 
நேற்று (சனி) அனைவரும் அயராது கட்டுரைகளை அளித்ததில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் பஞ்சாபியை முந்தி இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் - [[toolforge:fountain/editathons/project-tiger-2018-ta|981]]. பஞ்சாபி - [[toolforge:fountain/editathons/project-tiger-2018-pa|974]]. இந்த முன்னணியைத் தக்க வைப்பது நமது வெற்றிக்கு மிகவும் முக்கியம். இன்று முதல் போட்டி முடியும் மே 31 வரை ஒவ்வொரு நாளும் குறைந்தது 50+ கட்டுரைகளை எழுதுவது வெற்றியை உறுதி செய்யும். இது வரை 44 பேர் போட்டியில் கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். எல்லாராலும் இந்த வாரம் பங்களிப்பது இயலாது என்பதால், ஒவ்வொருவரும் அடுத்த ஐந்த நாட்களும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் போட்டியை வெல்லலாம். போட்டி முடியும் வரை ஒவ்வொரு நாள் நிலவரத்தை இங்கு இற்றைப்படுத்துகிறேன். நன்றி -- [[பயனர்:Ravidreams|இரவி]]
<!-- Message sent by User:Ravidreams@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Ravidreams/lists/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&oldid=2531213 -->
 
== Hareesh Paredi ==
 
இந்தக் கட்டுரையை 9000 பைட் அளவைத் தாண்டி விரிவாக்க முடிகிறதா பாருங்கள். போட்டிக் கணக்கில் சேர்க்கலாம். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 02:39, 28 மே 2018 (UTC)
 
== மீண்டும் பஞ்சாபியர் முன்னணி!! ==
 
வணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள்! தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- [[பயனர்:Ravidreams|இரவி]]
<!-- Message sent by User:Ravidreams@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Ravidreams/lists/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&oldid=2532245 -->
 
== வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை! ==
 
வணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். '''நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம்.''' இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா? வெல்வோம்! ஜெய் மகிழ்மதி :) --[[பயனர்:Ravidreams|இரவி]]
<!-- Message sent by User:Ravidreams@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Ravidreams/lists/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&oldid=2535127 -->
 
== வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம் ==
 
வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- [[பயனர்:Ravidreams|இரவி]]
<!-- Message sent by User:Ravidreams@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Ravidreams/lists/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&oldid=2536575 -->
 
== Regarding project tiger internet ==
 
Sir, Have you bought Internet? If not please buy before 14th June 2018. If you already bought internet please send us the bill. If you have any doubt please write to me at gopala{{@}}cis-india.org --[[பயனர்:Gopala Krishna A|Gopala Krishna A]] ([[பயனர் பேச்சு:Gopala Krishna A|பேச்சு]]) 10:52, 7 சூன் 2018 (UTC)
 
== கவனிக்க ==
 
தங்களுக்கு இக்கட்டுரையில் [[இ. எஸ். பொறியியல் கல்லூரி]] என்னா பிரச்சினை என்று எனக்கு புரியவில்லை. கொஞ்சம் விவரமாக கூறவும்..
::[[பயனர்:Gowtham Sampath]], உரையாடல்/பேச்சுப் பக்கங்களில் உரையாடும்போதும், கருத்தின் முடிவில் <nowiki>~~~~</nowiki> என்று இட்டு, பக்கத்தைச் சேமித்தால் கையொப்பமாக மாறிவிடும். பழகிக் கொள்ளுங்கள். தனியார் நிறுவனங்களைப் பற்றி எழுதும்பொழுது கூடுதல் கவனமாக எழுதுங்கள். குறிப்பிடத்தக்க மூன்று குறைகள்: குறிப்பிடத்தக்கமை, சான்றுகள், எழுத்துநடை.
 
1) கட்டுரையின் தலைப்பு குறிப்பிடத்தக்கதா என்று பார்க்க வேண்டும். இக்கல்லூரி மாநில அளவிலோ, தேசிய அளவிலோ குறிப்பிடத்தக்க சாதனை செய்திருந்தால் அதைக் குறிப்பிடலாம். பெரும்பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தாலோ, இன்ன பிற முக்கியத் தகவல்களையோ இருந்தால் அதைக் குறிப்பிடலாம். குறிப்பிடத்தக்கதாய் எதுவும் இல்லாதபட்சத்தில் கட்டுரை நீக்கப்பட வாய்ப்புள்ளது.
 
2) தனியாட்கள்/தனியார் நிறுவனங்களைப் பற்றி எழுதும்போது தகுந்த சான்று சேர்க்க வேண்டும். நீங்கள் தரும் சான்றானது நம்பகத்தன்மை உடையதாய் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இக்கல்லூரி பெற்ற அங்கீகாரங்களுக்கு சான்று கிடைத்தால் சேர்க்கலாம். (இணையத்தில் கிடைக்கின்றன) பெருவாரியான தமிழகக் கல்லூரிகள் ஒரு துறைக்கு சான்று பெற்றுவிட்டு, அனைத்து துறைகளுக்கும் பெற்றதைப் போல் காட்டிக் கொள்வது உண்டு. வரலாறு போன்ற முக்கியமான தகவல்களுக்கு சான்று கண்டிப்பாக தரப்பட வேண்டும். “30 வருடங்கள் அனுபவம் பெற்றது” போன்ற வரிகளுக்கு சான்றுகள் தருவது நம்பகத்தன்மையை கூட்டும். நாளேடுகளில் தொடர்புடைய செய்திகள் வந்திருந்தால் அவற்றைக் குறிப்பிடலாம். தரப்பட்டிருக்கிற சான்று ஏற்கக் கூடியதில்லை.
 
3) கட்டுரையில் பல இடங்களில் எழுத்துப்பிழைகளோ வாக்கியப் பிழைகளோ இருக்கின்றன. அவற்றையும் திருத்திவிடுங்கள்.
கூடுதல் தகவல்கள் கிடைத்தாலும், பத்தி வாரியாக பிரித்து எழுதலாம். நன்றி.
-[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 04:48, 8 ஆகத்து 2018 (UTC)
 
 
தங்களின் அறிவுரைக்கு நன்றி... "[[பயனர்:Gowtham Sampath|கௌதம் ❤ சம்பத் ]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 06:09, 8 ஆகத்து 2018 (UTC)"
 
==பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018==
'''பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018''', பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை [[விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018|இந்தப்]] பக்கத்தில் காணலம். நன்றி --[[பயனர்:Nandhinikandhasamy|நந்தினிகந்தசாமி]] ([[பயனர் பேச்சு:Nandhinikandhasamy|பேச்சு]])
 
== விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு ==
 
[[படிமம்:Wikipedia_Asian_Month_2018_Banner_ta.png|350px|மையம்|விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018]]
 
வணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற [[விக்கிப்பீடியா:ஆசிய மாதம் | விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில்]] பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 04:41, 2 நவம்பர் 2018 (UTC)
Return to the user page of "தமிழ்க்குரிசில்/தொகுப்பு 04".